தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Gabriella Charlton Quits From Vijay Television And Joins In Sun Television

Gabriella: ஆள விடுங்க டா சாமி.. விஜய் டிவிக்கு கும்பிடு போடு கிளம்பிய கேப்ரியல்லா.. காரணம் என்னவா இருக்கும் ?

Aarthi Balaji HT Tamil
Feb 05, 2024 11:48 AM IST

கேப்ரியல்லா விஜய் டிவியில் இருந்து தற்போது சன் டிவிக்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

கேப்ரியல்லா
கேப்ரியல்லா

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ந்/3 கேப்ரியல்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடன திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு பிக் பாஸ் 4 ஆவது சீசனில் பங்கேற்ற கேப்ரியல்லா ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கேப்ரியல்லாவுக்கு கிடைத்தது .

அதன் பிறகு ஈரமான ரோஜாவே மோயிஸ்ட் சீரியலின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார் கேப்ரியல்லா. ஒரு வருடத்தில் சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த சீரியலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் கேப்ரியல்லா. 

மேலும் அந்த புதிய சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது . அந்த சீரியலை வானத்தை போல் சீரியல் தயாரித்த அதே நிறுவனம் தான் இந்தப் புதிய சீரியலையும் தயாரிக்கிறது.

இந்த சீரியலில் ராகுல் ரவி ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் . இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணே கலைமானே, நந்தினி போன்ற தொடர்களில் நடித்து  உள்ளார் . சீரியலுக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. 

இதில் கேப்ரியல்லா மற்றும் ராகுல் ரவி இருவரும் கலந்து கொண்டு நடிக்கின்றனர். இந்த சீரியல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ராகுல் ரவி 2020 ஆம் ஆண்டு லட்சுமி நாயரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ராகுல் ரவி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதாக லட்சுமி நாயர் சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார். பின்னர் தலைமறைவான ராகுல் ரவி அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்று தற்போது புதிய சீரியலில் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

சீரியலின் ஷூட்டிங் தொடங்கிவிட்டாலும், இன்னும் அதி; நடிக்கும், நடிகை, நடிகைகள் எந்த மாதிரியான கதை வில்லன், வில்லி யார் என்ற முழு தகவல் வெளியாகவில்லை. விரைவில் இது தொடர்பான அடுத்த அறிவிப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்ரியல்லா சார்ல்டன் என்ற கேபி, தனது ஒன்பதாவது வயதில் ' ஜோடி ஜூனியர்'  என்ற நடன நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு, அவர் தினசரி ஷோவான, 7C இல் தோன்றினார். 

இது தமிழ் டெலி பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமானது. பின்னர் கேப்ரியல்லா பிக் பாஸ் தமிழ் 4 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அதன் பிறகு தான் தற்போது, ​​தினசரி சீரியலான ஈரமான ரோஜாவே 2 இல் கேப்ரியல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.