'நான் வாழ்ற இந்த வாழ்க்கை.. சோறுதட்டு.. வசந்த பாலன் போட்டது..' நெகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போன ரவி மரியா!
'நான் வாழ்ற இந்த வாழ்க்கை.. சோறுதட்டு.. வசந்த பாலன் போட்டது..' என நடிகர் ரவி மரியா நெகிழ்ச்சி படப் பேசியுள்ளார்.
தான் வாழுகின்ற இந்த வாழ்க்கை.. சோற்றுக்கான தட்டு.. வசந்த பாலன் போட்டது என ரவி மரியா நெகிழ்ச்சி படப்பேசியுள்ளார்.
இதுதொடர்பாக சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில், டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு நடிகர் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு கொடுத்த நடிகரும் இயக்குநருமான ரவி மரியா அளித்த பேட்டியில் இருந்த கேள்வி பதில்களின் தொகுப்பு.
அதில்,
’’முதல் பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் உங்களது மனநிலை எவ்வாறு இருந்தது?
பதில்: நான் பயங்கர ஆன்மிகவாதி. சர்ச்க்குப் போவேன். சாமியையும் விழுந்து விழுந்து கும்பிடுற ஆளு. என் மனைவி ரொம்ப பக்கபலமாக இருப்பாங்க. எந்தப் பிரச்னை என்றாலும் விடுங்க பார்த்துக்கலாம் என்பார். அழுகுறமாதிரி இருந்தால் இதுக்குப்போய் அழுதிட்டு இருக்கீங்க, கடவுள்ட்ட போய் ஒப்படைக்கிறதுவிட்டுவிட்டு அப்படின்னு சொல்வாங்க. அப்புறம் மறுபடியும் எஸ்.ஜே.சூர்யாகிட்ட போய் நின்னேன். அப்போது தான், அன்பே ஆருயிரே, நியூ படங்கள் எல்லாம் எடுத்தார். அவர் ஹீரோவாக நடிக்கிறப்போ, நான் தான் ஆக்சன், கட் சொல்வேன். அந்த உரிமையை எனக்குக் கொடுத்திருந்தார். என்னை எங்கேஜுடு வைச்சிட்டே இருப்பேன். அடுத்த படத்துக்கு கதை ரெடி பண்ணிட்டு இருக்கேன். அப்படி எல்லாம் சொல்லமாட்டேன். வேலைக்குப் போய்க்கிட்டே இருப்பேன். அது என்னோட பலமாக மாறுச்சு.
உங்கள் திரைப்பயணத்தில் பாதையை மடைமாற்றம் செய்தது வசந்தபாலன் தானா?
பதில்: வசந்த பாலன் என் நண்பர் மட்டுமில்ல, இன்றைக்கு நான் வாழுகிற வாழ்க்கையோட சோறுத்தட்டு. அது வசந்தபாலன் கொடுத்த தட்டு. அதுதான் உண்மை. நண்பன்.
எப்படி பாத்திரத்துக்குத் தேர்வு பண்ணாங்க?
பதில்: நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன் சார். தட்டை தட்டிவிட்டேன் தெரியாம. நீங்கபாட்டுக்கு டைரக்ஷன் பண்ணி ஜாலியாகப் போய்டுவீங்க. நான் நடிக்கணுமா என்றெல்லாம் ஜாலியாக கேட்டு இருக்கேன். (சிரிக்கிறார்). ஷங்கர் சார் புரொடெக்ஷன். நிறையபேர் போட்டோ கொடுத்துட்டு போய்ட்டு இருக்காங்க அப்படின்னு சொன்னார். அதெல்லாம் முடியாதுன்னு வற்புறுத்தி நடிக்கவைச்சார். அது பெரிய ஆசீர்வாதம் என்று தெரியாமல் உதறப்போய், நண்பன் என்பதால் அதை மீண்டும் எனக்கு அந்த கதாபாத்திரத்தைக் கொடுத்து நடிக்க வைச்சார்.
அது பெரிய ஆசீர்வாதம் என்று தெரியாமல் உதறப்போய், நண்பன் என்பதால் அதை மீண்டும் எனக்கு அந்த கதாபாத்திரத்தைக் கொடுத்து நடிக்க வைச்சார். அந்தப் படத்தில் நடிக்க ஆரம்பிச்சபிறகு, எதிலேயும் டூப் போடலை. சூப்பர் சூப்புராயன் தான் மாஸ்டர். சண்டைக்காட்சிகளில் நிஜமாகவே அடிபட்டுச்சு. சின்ஸியரா பண்ணுனேன். லிங்குசாமி சார் படத்தைப் பார்த்திட்டு, பைரவி படத்தில் ரஜினிகாந்தை பார்த்தமாதிரி இருந்துச்சுன்னு பாராட்டுனார். அது தான் பின்னாடி வாழ்வாதாரமாகவே மாறிடுச்சு. அப்பதான் புரிஞ்சுக்கிட்டேன். வந்த எந்த வாய்ப்பையும் உடனே வேண்டாம்ன்னு சொல்லக்கூடாது. இரண்டு நாள் யோசித்துக் கூட பதில் சொல்லலாம், அந்த அறிவு அதில் தான் வந்துச்சு.
அந்தப் படத்தோட வெற்றி எப்படிப்பட்ட மாற்றத்தை வாழ்க்கையில் கொண்டு வந்தது?
பதில்: வெயில் படம் ரிலீஸாகி வெற்றி பெற்ற பின்னரும், நடிப்புக்காக என்னைத் தேடி யாரும் வரல சார். படம் நல்லா ஓடுது. வசந்த பாலனை தூக்கி எல்லோரும் கொண்டாடுறாங்க. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயினுக்கு அப்புறம் நாம் தானே வில்லன். நம்மை யாரும் நடிக்கக் கூப்பிடலையேன்னு இருந்துச்சு. சத்தியமாக எந்த வாய்ப்புமே வல்ல சார். பிறகு நானாகப் போய் பேரரசு சாரை பார்த்து வாய்ப்புக்கிட்டேன். அதன்பின், பழனி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிச்சேன். என்னோட சின்ஸியாரிட்டி பார்த்துட்டு, என்னோட சீன்களை டைரக்டர் அதிகப்படுத்தினார்.
அதன்பின் மாயாண்டி குடும்பத்தாரில் நடிச்சேன். அப்போது எப்படி எனக்கு வாய்ப்பு வருகிறது என்றால் பத்து இயக்குநர்கள் சேர்ந்து நடிக்கும் படம், அப்படி என்கிற வகையில் மாயாண்டி குடும்பத்தாரில் நடிக்க வந்தேன்.
அதன்பின்னும் எனக்கு வாய்ப்புகள் வரவில்லை. அப்போது எல்லோரும் டைரக்டர்ன்னு சொல்லி கொஞ்சம் தூரமாகவைச்சுப் பார்த்திருப்பாங்க போல. நான் இயக்குநர்களுக்கு ஆலோசனை எல்லாம் சொல்லமாட்டேன். கொடுக்கிற வேலையை சின்ஸியரா செஞ்சிட்டுப்போய்ட்டே இருப்பேன்'’ என பேசினார் நடிகர் ரவி மரியா.
நன்றி: டூரிங் டாக்கீஸ்
டாபிக்ஸ்