Palani Panchamirtham Issue: பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு..வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார்-palani panchamirtham issue complaint registered against bjp officials vinoj p selvam and selvakumar for spreading rumor - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Panchamirtham Issue: பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு..வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார்

Palani Panchamirtham Issue: பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு..வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 21, 2024 11:59 AM IST

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த நிறுவனத்தின் தலைவர் பழனி அறங்காவலர் குழுவில் இருப்பதால் பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Palani Panchamirtham Issue: பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு..வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார்
Palani Panchamirtham Issue: பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு..வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார்

ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனம் தான் பழனி கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்யப்படுகிறது என்ற தவறான செய்தியை பரப்பிய பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும் லட்டு தயாரிப்பதற்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கிய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்து கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வினோத் பி செல்வம் மற்றும் பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தனர்.

அதில், திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனம்தான் பழனி கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ராஜசேகரன் என்பவர் பழனி கோவில் நிர்வாக குழு தலைவராக செயல்படுகிறார் என்ற செய்தி சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழ்நாடு அரசு இவரை பணிநீக்கம் செய்வதுடன் ஆவின் நிறுவனத்திடம் நெய் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது எக்ஸ் தளத்தில் தவறான செய்தியை பதிவு செய்திருந்தார்.

தமிழ்நாடு அரசு விளக்கம்

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் "பழனி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்தே பெறப்படுகிறது" என்றும் அறநிலையத்துறை கூறியிருந்தது.

மேலும், "பழனி கோவில் அறங்காவலர் குழு கடந்த மாதம் பதவி காலம் முடிந்து விட்டது. ராஜசேகரன் என்பவர் குழுவின் தலைவர் இல்லை என்பதும் அவர் குழுவில் ஒரு உறுப்பினர் தான்" என விளக்கம் அளிக்கப்பட்டது.

போலீசில் புகார்

இதைத்தொடர்ந்து பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் பா.ஜ.க தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் மீது தவறான தகவலை பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ஃபுட்ஸ் விளக்கம்

முன்னதாக, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, திண்டுக்கல் - மதுரை சாலை பிள்ளையார்நத்தம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை எனத் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். ஃபுட்ஸ் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தானம் விவகாரத்தில் எழுத்து பூர்வமாக அனைத்து கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பதாகவும், தங்களது நிறுவனத்தின் நெய் தரமானது என எங்கு வேண்டுமானாலும் நிருபிக்க தயார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.