Vettaiyan Trailer: ட்ரெயிலர் தேதி வந்தாச்சு... இலக்கு ரெடி.. இரையை பிடிக்க தயாராகுங்க.. அப்டேட் கொடுத்த வேட்டையன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vettaiyan Trailer: ட்ரெயிலர் தேதி வந்தாச்சு... இலக்கு ரெடி.. இரையை பிடிக்க தயாராகுங்க.. அப்டேட் கொடுத்த வேட்டையன்

Vettaiyan Trailer: ட்ரெயிலர் தேதி வந்தாச்சு... இலக்கு ரெடி.. இரையை பிடிக்க தயாராகுங்க.. அப்டேட் கொடுத்த வேட்டையன்

Malavica Natarajan HT Tamil
Sep 30, 2024 10:03 PM IST

Vettaiyan Trailer: நடிகர் ரஜினிகாந்த்- அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் ட்ரெயிலர் வரும் அக்டோபர் 2ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Vettaiyan Trailer: ட்ரெயிலர் தேதி வந்தாச்சு... இலக்கு ரெடி.. இரையை பிடிக்க தயாராகுங்க.. அப்டேட் கொடுத்த வேட்டையன்
Vettaiyan Trailer: ட்ரெயிலர் தேதி வந்தாச்சு... இலக்கு ரெடி.. இரையை பிடிக்க தயாராகுங்க.. அப்டேட் கொடுத்த வேட்டையன்

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. 2 மணி நேரம் 47 நிமிடம் உள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெயிலர் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.

வேட்டையன் அப்டேட்

முன்னதாக, படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் துள்ளலான இசையினால் இளைஞர்களையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் ரஜினி காந்த்தின் 170வது படமான வேட்டையனை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், படக்குழு அப்டேட் மேல் அப்டேட்டாக வழங்கி வருகிறது. அந்த வகையில், திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்களையும் படத்தில் அவர் எந்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதையும் இதுவரை வெளியிட்டது.

வேட்டையன் கேரக்டர்கள்

அந்த அறிவிப்பின் படி, நடிகர் அமிதாப் பச்சன், சத்யதேவ் என்ற கதாபாத்திரத்திலும் மஞ்சு வாரியர், தாரா என்ற கதாபாத்திரத்திலும் ஃபகத் ஃபாசில், பேட்ரிக் என்ற கதாபாத்திரத்திலும் ரித்திகா சிங், ரூபா என்ற கதாபாத்திரத்திலும் அபிராமி, ஸ்வேதா என்ற கதாபாத்திரத்திலும் கிஷோர், ஹரிஷ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் வேட்டையன் திரைப்படத்தின் டீசரை வைத்துப் பார்க்கும் போது இது என்கவுண்டர் குறித்து விரிவாக பேசும் படமாக அமையலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

முன்னதாக இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் பழங்குடி மக்களின் துயர்களை எடுத்துக்கூறும் விதமாக அமைந்தது. மேலும், இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இத்திரைப்படம் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் ரஜினியை போலீசாக வைத்து படம் எடுத்து வரும் நிலையில், இந்தப் படமும் ஏதேனும் சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

ரஜினியின் குட்டி கதை

சில நாட்களுக்கு முன் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி காந்த் சுமார் 52 நிமிடங்கள் பேசினார். வழக்கமாக அவரின் திரைப்பட நிகழ்ச்சியில் குட்டி கதை கூறும் அவர், தற்போது பேசுகையில், சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும் எனக் கூறியிருந்தார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ட்ரெயிலர் அப்டேட்

இதற்கிடையில், வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, வரும் அக்டோபர் 2ம் தேதி திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என அந்நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும், அந்தப் பதிவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது! வேட்டையன் டிரைலர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. இரையைப் பிடிக்க தயாராகுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் ட்ரெயிலர் வெளியீட்டுக்காக இப்போதிலிருந்தே காத்திருக்கின்றனர்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.