தனுஷுக்கு தடபுடலாக திருமண ஏற்பாடு செய்யும் தந்தை.. விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் நடக்கும் வேலைகள்..
நடிகர் நெப்போலியன் தனது மகனின் திருமணத்திற்காக ஜப்பானிலிருந்து ஒசாகாவிற்கு சென்று கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நெப்போலியன், அவரது குரலும், உருவமுமோ பார்ப்போரை கதிகலங்க வைக்கும். பாரதிராஜா மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகனாக இருந்து பின் சினிமாவை விட்டே விலகினார்.
இதைத் தொடர்ந்து கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், எம்பியாகவும், மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அவர் இந்தியாவை விட்டே வெளியேறினார்.
நெப்போலியன் மகனுக்கு திருமணம்
நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷ் சிறு வயதில் இருந்தே தசை சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். நெப்போலியன் இவரது சிகிச்சைக்காகவே அமெரிக்கா சென்ற நிலையில், இப்போது அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
வெறுப்பு கருத்துகள்
இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட்ட நெப்போலியன், தன் மகன் தனுஷுக்கு திருநெல்வேலியை சேர்ந்த பெண்ணுடன் அடுத்த மாதம் ஜப்பானில் திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது என தங்கள் வீட்டில் பல ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் சுப நிகழ்வு குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். இதைக் கண்ட இணையவாசிகள், தனுஷின் உடல்நலக் குறைபாட்டை சுட்டிக்காட்டி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்குவதாக கருத்து தெரிவித்திருந்தனர். அத்துடன், பணம் இருப்பதால் உங்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என பல விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
நெப்போலியன் வேண்டுகோள்
இதற்கு பதிலளித்த நெப்போலியன், மனதை மிகவும் நோகடிக்காதீர்கள், இங்கு அனைவருக்கும் குடும்பம் உள்ளது. அவர்களை மனதில் வைத்துக் கொண்டு மற்றவரை விமர்சிக்க கற்றுக் கொள்ளுங்கள். நல்ல வார்த்தைகளை கூற மனம் வரவில்லை என்றால் கருத்து தெரிவிக்காமலாவது இருக்கலாம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
பதிலடி கொடுத்த தனுஷ்
பின் மீண்டும் மீண்டும் இதுபோன்ற கருத்துகள் எழுந்து வந்த நிலையில், நெப்போலியனின் மகன் தனுஷ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி இருந்தார். அதில், சிலர் என்னைப் போல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதுவம் செய்யக் கூடாது, எதுவும் செய்ய முடியாது என தொடர்ந்து கூறி வருகின்றனர். அதையெல்லாம் நான் கேட்கப் போவதில்லை. என்னுடைய திருமணம் குறித்தும் எதிர்மறையான கருத்துகளை முன்வைக்கிறீர்கள். நான் அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. ஏனென்றால் நான் உங்கள் வார்த்தைகளுக்காக என் நம்பிக்கையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தன்னம்பிக்கையுடன் முன்னேறி செல்வேன் என பதிலளித்திருந்தார்.
ஜப்பானில் தடபுடல் ஏற்பாடு
இந்நிலையில், நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் அமெரக்காவில் நடந்சதால் குடியுரிமை பிரச்சனை வரும் என்பதால், ஜப்பானில் நடத்த திட்டமிட்டு, நெப்போலியன் அவரின் குடும்பத்தோடு ஜப்பான் வந்துள்ளார். அங்கு, அவரது இரு மகன்களும் புல்லெட் ரயிலில் மிக ஆர்வமாக பயணித்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இவர்கள் இருவரும் உண்மையில், மிகவும் ஆனந்தமாக இருக்கிறார்கள் என பதிவிட்டிருந்தார்.
இணையத்தில் அதிக எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வரும் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,
டாபிக்ஸ்