ஒரு ஃபிரேம்ல 1000 பேர்.. அதெல்லாம் பிரமாண்டமா.. முக்கியப்புள்ளியை டைரக்ட் ஆக வெளுத்துவிட்ட நடிகர் நட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரு ஃபிரேம்ல 1000 பேர்.. அதெல்லாம் பிரமாண்டமா.. முக்கியப்புள்ளியை டைரக்ட் ஆக வெளுத்துவிட்ட நடிகர் நட்டி

ஒரு ஃபிரேம்ல 1000 பேர்.. அதெல்லாம் பிரமாண்டமா.. முக்கியப்புள்ளியை டைரக்ட் ஆக வெளுத்துவிட்ட நடிகர் நட்டி

Marimuthu M HT Tamil
Dec 22, 2024 06:19 PM IST

ஒரு ஃபிரேம்ல 1000 பேர்.. அதெல்லாம் பிரமாண்டமா.. முக்கியப்புள்ளியை டைரக்ட் ஆக வெளுத்துவிட்ட நடிகர் நட்டி குறித்துப் பார்ப்போம்.

ஒரு ஃபிரேம்ல 1000 பேர்.. அதெல்லாம் பிரமாண்டமா.. முக்கியப்புள்ளியை டைரக்ட் ஆக வெளுத்துவிட்ட  நடிகர் நட்டி
ஒரு ஃபிரேம்ல 1000 பேர்.. அதெல்லாம் பிரமாண்டமா.. முக்கியப்புள்ளியை டைரக்ட் ஆக வெளுத்துவிட்ட நடிகர் நட்டி

கோவையில் செய்தியாளர்களை நடிகர் நட்டி சந்தித்துப்பேசினார். அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

விமர்சனங்களால் படம் பாதிப்பாகுதுன்னு சொல்றது பற்றி?

பதில்: ஒவ்வொருத்தரும் பணம்போட்டு படம் பாக்குறாங்க. அதில் இருக்குற நிறை, குறையை அவங்க சொல்வாங்க. அது வரவேற்கப்படக்கூடிய விஷயம். அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் என்னைப்பொறுத்தவரை. தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ளலாம்.

அல்லு அர்ஜூன் கைதுக்குப் பின் திரைத்துறையினர் அவரை வீட்டில் போய் சந்திக்கும் அளவுக்கு அது பெரிய விஷயம் இல்லை என்று சொல்லியிருக்கிறார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி. அதுபற்றி உங்கள் கருத்து?

பதில்: இது அவங்க பிரச்னை. அங்கு என்ன நடந்ததுன்னு நமக்குத்தெளிவாகத் தெரியாது. அந்த லேடி இறந்தது இவர் வந்ததுக்குப் பின்னாடியா, இல்லை முன்னாடியேவா அப்படியெல்லாம் தெளிவாகத் தெரியாது. அதைத்தான் அவங்க விசாரித்துக்கொண்டு இருக்காங்க. அதன்பின் தான் தெளிவான பதில் கிடைக்கும். பிறகுதான், நாம் அதைப்பற்றி கருத்து சொல்லமுடியும்.

ஓடிடியில் நிறைய பரிணாமங்கள்னு சொல்றாங்களே. அது பற்றி உங்கள் கருத்து?

பதில்: ஓடிடியால் என்ன பிரச்னை இருக்கு சார். ஓடிடி என்பது பரிணாம வளர்ச்சி சார். செல்போனில் படம் பாக்குற அளவுக்கு வந்திருக்கோம். அடுத்து விர்ச்சுவலாகப் படம் பார்க்கும் அளவுக்கு வந்திடுவோம். இதுவளர்ந்துகிட்டே தான் இருக்கும். அதற்கேற்றார்போல், நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது நல்லது.

கோவையைப் பொறுத்தவரை நிறைய தியேட்டர்கள் இருந்தது. இப்போது அது எல்லாம் வணிக வளாகம் ஆகிடுச்சு? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: சார் முன்பு எல்லாம் 50 லட்ச ரூபாயில் படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது 120 கோடிக்கு படம் எடுக்குறாங்க. எப்படி ரெக்கவர் பண்ணுவாங்க. டிக்கெட் அதிகமாக விற்றுத்தானே. இப்படி வளர்ச்சி வளர்ந்துகொண்டே தான் சார் இருக்கும். அதனால் இன்னும் 4 தியேட்டர்கள் வரும். கூடுதலாக மக்கள் வருவார்கள்.

தொழில்நுட்பம் எப்படி இருக்கு சார்?

பதில்: ரொம்ப நல்லா இருக்கு சார். இப்போதே போனில் படம் எடுக்க ஆரம்பிச்சிட்டோம். இன்னும் கொஞ்சநாட்களில் ஈஸியான விசயங்கள் வரும். அந்த தொழில் நுட்பத்துக்கு ஏற்ப நாமும் வளர்ந்திரணும்.

ஏ.ஐ தொழில் நுட்பத்தால் கெடுதல் தான் இருக்கா?

பதில்: அப்படியில்லை சார். படைத்தலைவன் படத்தில் விஜயகாந்த் சாரை காண்பித்திருக்கிறார்கள். அப்படி நல்ல விஷயத்துக்கு யூஸ் செய்தால் நல்லது. தவறான விஷயத்துக்கு யூஸ் பண்ணக்கூடாது.

அடுத்த படங்கள் பற்றி?

பதில்: நல்லபடியாக இருக்கு. நல்ல நல்ல படங்கள் வருது. அதனால் நல்லபடியாக போய்ட்டு இருக்கு. இப்போது சூர்யா சார் கூட ஒரு படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். அதனால் தான் கோவையில் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தேன். 

விஜய்யுடன் பணியாற்றியிருக்கிறீர்கள். அவரது அரசியல் வருகை குறித்து உங்கள் கருத்து?

பதில்: அது அவருடைய பெர்ஷனல் சார். வந்திட்டார்.பொதுக்கூட்டம் எல்லாம் போட்டுட்டார். அடுத்தது அவர் என்ன பண்ணுவார்னு பார்ப்போம். என்னைப் பொறுத்தவரை, அவர் நடிச்சிக்கிட்டே செய்யலாம். அவர் நடிப்பை நிறுத்தினது எங்களை மாதிரி ஆட்களுக்கு மன வருத்தம் தான். 

ஷங்கர் சார், மணிரத்னம் சார் தவிர வேறு யாரும் பிரமாண்ட படங்கள் தரலை அதுபற்றி?

பதில்: வரக்கூடிய தமிழ்ப்படங்கள் எல்லாம் பிரமாண்டமான படம் தான். ஒரு ஃபிரேமில் ஆயிரம்பேர் இருக்கிறதால் அது பிரமாண்டமான படம் கிடையாது சார். 

கங்குவா படத்தின் தோல்வி பற்றி?

பதில்: கங்குவா நல்ல படம். இருந்தாலும் அது ஆடியன்ஸை போய் சேரலை. அடுத்த படத்தில் திருத்திக்குவாங்க. அதனுடைய இரண்டாம் பாகம் வந்தபின், அதை மக்கள் ஏத்துக்கலாம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.