இந்தப்பாட்டில் கேப்டனை பார்த்ததும் மிகப்பெரிய ரசிகை ஆனேன்.. நானும் அவரும் ரசித்த அந்தப் பாடல்.. பிரேமலதா விஜயகாந்த்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இந்தப்பாட்டில் கேப்டனை பார்த்ததும் மிகப்பெரிய ரசிகை ஆனேன்.. நானும் அவரும் ரசித்த அந்தப் பாடல்.. பிரேமலதா விஜயகாந்த்

இந்தப்பாட்டில் கேப்டனை பார்த்ததும் மிகப்பெரிய ரசிகை ஆனேன்.. நானும் அவரும் ரசித்த அந்தப் பாடல்.. பிரேமலதா விஜயகாந்த்

Marimuthu M HT Tamil
Dec 21, 2024 03:54 PM IST

இந்தப்பாட்டில் கேப்டனை பார்த்ததும் மிகப்பெரிய ரசிகை ஆனேன்.. நானும் அவரும் ரசித்த அந்தப் பாடல்.. பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாகப் பேசியுள்ளார்.

இந்தப்பாட்டில் கேப்டனை பார்த்ததும் மிகப்பெரிய ரசிகை ஆனேன்.. நானும் அவரும் ரசித்த அந்தப் பாடல்.. பிரேமலதா விஜயகாந்த்
இந்தப்பாட்டில் கேப்டனை பார்த்ததும் மிகப்பெரிய ரசிகை ஆனேன்.. நானும் அவரும் ரசித்த அந்தப் பாடல்.. பிரேமலதா விஜயகாந்த்

விழா மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘’நான் இப்போது எங்கு போனாலும் உன்னைத்தினம் தேடும் தலைவன் அப்படிங்கிற பாடலைப் பாடுவதும், அதேபோல, ’என்னாசை மச்சான்’ படத்தில் ‘ஆடியில சேதி சொல்லி பாடலை’ பாடி என் கண்களில் நீர் வரவழைக்கிறது தொடர் நிகழ்ச்சியாக இருக்குது.

நான் அந்தப் பாடலைக் கேட்கும்போது என்னுடைய கல்லூரி பருவத்திற்குப் போய்டுவேன். ’உன்னைத் தினம் தேடும் தலைவன்’அப்படிங்கிற பாடல், நான் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஆக இருந்தபோது, கேப்டனுடைய திரைப்படத்தை என்னுடைய தகப்பனார் வேலை செய்த மூங்கில்துறைப்பட்டு என்னும் ஊரில், அந்தக் கிராமப் பின்னணியில், அந்த கிராம மக்களோடு நான் அந்தப் பாடலைப் பார்த்த அந்த நொடியே, கேப்டனுடைய மிகப்பெரிய ஃபேன் ஆக மாறிவிட்டேன்.

உழவர் மகன் திரைப்படத்தின் வெற்றி:

அதற்கு முன்னாடி எத்தனையோ திருமணங்கள் தலைவர் இது பார்த்திருக்கேன். ஆரம்பக்காலத்தில் இருந்து ‘தூரத்து இடி முழக்கம்’, ’சட்டம் ஒரு இருட்டறை’, ’வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’ என்று தலைவர் படத்தை நான் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். ஆனால், என் மனதை மிகவும் கவர்ந்த படமாக இருந்தது, உழவர் மகன். அதை எங்கள் அன்பு சகோதரர் அண்ணன் இப்ராகிம் ராவுத்தருடைய முதல் தயாரிப்பில், ஐ.வி. சினி கிரியேசன்ஸில் திரைப்படம் உருவாகி, பட்டித்தொட்டியெங்கும் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக ’உழவர் மகன்’ அமைந்தது.

அப்போது நான் ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்கு வந்து ஃபேமிலியோடு சென்று அந்தப் படத்தை நான் பார்த்தேன். இப்போது நீங்கள் பாடும் ஒவ்வொரு துளி நேரமும் எனது நினைவுகள் வந்து கேப்டனை ஒரு ஒரு ஃபிரேமில் நான் எப்படி கேப்டனை ரசிச்சேன், எப்படி அவரை ஆராதனை செய்தேன், அப்படி அவரை நான் கொண்டாடினேன் என்பது என் மனசுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம். 

கடவுள் கொடுத்த மிகப்பெரிய வாழ்க்கை அவர் என் கணவன் ஆனது: விஜயகாந்த்!

அந்த வகையில் கடவுள் எனக்கு கேப்டனையே கணவராக கொடுப்பார்னு எனக்குத் தெரியாது. ஒரு சாதாரண கல்லூரி மாணவியாக, ஒரு விசிறி மாதிரி தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். ஆனால், கடவுளுடைய கிருபை, யாரை திரையில் கண்டு ரசித்தேனோ, அவரையே எனது கணவனாகக் கொடுத்து மிகப்பெரிய பாக்கியத்தை, கடவுள் கொடுத்த நாட்களை என் வாழ்நாள் இறுதிமூச்சு இருக்கும் வரை, என் ரத்தத்திலும் இறுதிமூச்சு இருக்கும்வரை நடந்த ஒரு விஷயமாக நான் அதைப் பார்க்கிறேன். அதனால் நிச்சயமாக ஆடியிலே சேதி சொல்லி பாடல் வந்து, நான் மட்டுமில்ல, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு இல்லத்தரசியும், அவங்க அவங்க கணவரை தங்களது தெய்வமாக நினைத்து, அந்தப் பாடலை ரசிப்பார்கள். நானும் கேப்டனும் அந்தப் பாடலை மிகவும் ரசித்துக் கேட்போம்.

ஒவ்வொரு வார்த்தையும் அதில் அர்த்தமானதாக இருக்கும். அதனால் தலைவருடைய பாடல்கள் அத்தனையுமே மிகப்பெரிய வெற்றிப் பாடல்கள் தான். என்னை மிகவும் கவர்ந்த கேப்டனின் பல பாடல்களில் சிலவற்றைப் பாடி, நாம் கேப்டனுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறோம்.

எனவே, இங்கு பாடிய அனைவருமே மிகச்சிறந்த அளவில் பாடலைப் பாடியிருக்கீங்க. இந்த முயற்சியை எடுத்து நீங்கள் உங்கள் சாதனையை நிரூபிச்சிருக்கீங்க. இன்னும் மேலும் மேலும் உங்களது புகழ், தமிழகம் முழுவதுமே கவிதா இன்னிசை மழையின் இசைக்கச்சேரி நடக்கட்டும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.