Nakul : நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.. கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் பரபர புகார்!-actor nakul has filed a complaint at the chennai commissioner office - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nakul : நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.. கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் பரபர புகார்!

Nakul : நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.. கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் பரபர புகார்!

Divya Sekar HT Tamil
Oct 02, 2024 12:01 PM IST

Actor Nakul : நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தொடர்ந்து இழிவாக பேசி வரும் சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார் அளித்துள்ளார்.

Nakul : நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.. கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார்!
Nakul : நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.. கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார்!

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகம்

பாய்ஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன்பின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி என நடித்தார். இரண்டு படங்களுமே நல்ல ஹிட் கொடுத்தது. அதன் பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் அது அவ்வளவாக பேசப்படவில்லை. இடையில் பல ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் நடிப்பில் கடைசியாக வாஸ்கோடகாமா படம் வெளியாகி இருந்தது. 

ஆர்.ஜி.கிருஷ்னன் இயக்கிய இந்த படத்தில், வம்சி கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு ஓடியது.

நகுல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த நிலையில் இப்படத்தில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர் நகுல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். நான் வாஸ்கோடகாமா படத்தில் அசோசியேட் இயக்குனராக இரண்டு ஆண்டுகளாக வேலை செய்தேன். ஆனால், கடைசி 10 நாள்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு என்னை கூப்பிடவே இல்லை. இதற்கு காரணம் நகுல் தான், அவர் படப்பிடிப்பு தளத்தில், என்னிடம் காண்டம் வாங்கி வர சொன்னார். நான் வேலை இருக்கு முடியாது என்றேன். 

இணையத்தில் பேசுபொருளானது

பின் மீண்டும் காலை 3 மணி அளவில், காண்டம் வேணும் என்றார். நான் அப்போதும், முடியாதுன்னு சொல்லி சென்று விட்டேன். இதை மனதில் வைத்துக்கொண்டு நடிகர் நகுல், சந்துரு சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் நான் வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். இதனால், இரண்டு ஆண்டு உழைப்பு வீணாகிவிட்டது என பேசி இருந்தார். இது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.

நடிகர் நகுல் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் 

இந்நிலையில், நடிகர் நகுல், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில்,சமீபத்தில் நான் வாஸ்கோடகாமா படத்தில் நடித்தேன். அந்த படத்தில் தன்னுடன் பணியாற்றிய சந்துரு என்பவர் தன்னைப் பற்றியும் இயக்குநர் ஆர்.ஜி. கிருஷ்ணன் பற்றியும், என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகைகள் அர்த்தனா மற்றும் சுனைனா பற்றியும் அநாகரிகமாக, தவறாக யூடியூப்பில் பேட்டி அளித்துள்ளார். 

இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தொடர்ந்து இழிவாக பேசி வரும் சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், யூடியூப் சேனலில் அவர் பேசிய அந்த காணொலியை நீக்க வேண்டும் நடிகர் நகுல் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.