Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ..! தெறித்து ஓடிய நடிகை - பயில்வான் சொன்ன விஷயம்-journalist bayilvan ranganathan interview on rumour about tamil hero asked director to purchase condom - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ..! தெறித்து ஓடிய நடிகை - பயில்வான் சொன்ன விஷயம்

Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ..! தெறித்து ஓடிய நடிகை - பயில்வான் சொன்ன விஷயம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 28, 2024 10:19 PM IST

Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ, தெறித்து ஓடிய நடிகை குறித்து உலா வரும் கிசுகிசு குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ..! தெறித்து ஓடிய நடிகை - பயில்வான் சொன்ன விஷயம்
Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ..! தெறித்து ஓடிய நடிகை - பயில்வான் சொன்ன விஷயம்

"வாஸ்கோடகாமா படத்தின் இயக்குநரே இதை சொல்லியுள்ளார். இரவ 12.30 மணிக்கு நகுல் காண்டம் வாங்க அனுப்பினார். அப்புறம் அட்ஜெஸ்ட் பண்ண சொன்னார். ஆனால் நடிகை தெறித்து ஓடிவிட்டார் என்ற கிசுகிசுக்கள் வந்தன. 

அந்த படத்தில் நானே நடித்துள்ளேன். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட பங்கேற்றேன். அப்போது நீண்ட இடைவெளிக்கு பின் நகுல் மற்றும் அவரது சகோதரி தேவையானி ஆகியோர் சந்தித்து கொண்டனர்.

அனைத்தும் பொய்

இந்த சூழ்நிலையில் நகுல் தொடர்பான கிசுகிசு பற்றி இயக்குநரிடம் விசாரித்தேன். அது பொய் தகவல். இந்த மாதிரி சம்பவம் நடக்கவில்லை. ஏனென்றால் சுனைனா நகுலுடன் ஜோடியாக நடித்துள்ளார். பிரஹிடா ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு நடிப்பு வரவில்லை என தூக்கியுள்ளனர்.

உதவி இயக்குநராக சேர வந்த சந்துரு என்ற நபர் வாய்ப்பு கொடுக்கவில்லை என கூறி இப்படி பேசியுள்ளார். நடிகர், நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேசியதால் உடனடியாக போலீஸில் புகார் அளியுங்கள் என அவரிடம் கூறினேன்.

மீடு விவகாரம், சினிமாவில் இந்த மாதிரி விஷயங்களுகெல்லாம் சாட்சி கிடையாது. சினிமா நடிகர்களுக்கு எதிராக யாரும் பேசமாட்டார்கள். ஏனென்றால் அப்படி பேசினால் அவர்களின் கேரியரே க்ளோஸ் ஆகிவிடும். 

வாஸ்கோடகாமா படம் சரியாக போகவில்லை. அதனால் நகுல் கம்பேக்கை உறுதியாக சொல்ல முடியாது.

சாட்சிகள் இல்லாமல் மீடு விஷயங்கள் பேச்சாகவே உள்ளது

கேரளாவில் அடியாள்களை வைத்து நடிகையை கடத்தி நடிகர் திலீப் துன்புறுத்தினார். அதற்கான ஆதாரம் இருந்தது. இதனால் கைது செய்யப்பட்டு ஆறு மாத காலம் வரை திலீல் சிறையில் இருந்தார். விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வரலாம்

தெலுங்கில் நடிகர் என்டிஆர் மீது புகார் கொடுத்தது. அப்போது போலீசாரும் விசாரித்தனர். அவருக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லவில்லை. வேறு வழியில்லாமல் புகார் சொன்ன நடிகை வந்தார். எனவே எந்தவொரு விஷயத்திலும் சாட்சி, ஆதாரம் முக்கியம்." 

கேரளாவில் தற்போது நிலவும் விவகாரத்தில் கூட சாட்சி இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. எவரும் தொழிலை கெடுத்துக்கொண்டு மற்றவருக்கு உதவ முன் வர மாட்டார்கள். இதனால் தான் சினிமாவில் இதுபோன்ற கேஸ்கள் முடிவுக்கு வரதில்லை

சனம்ஷெட்டி புகார் 

சமீபத்தில் சனம்ஷெட்டி கூட கேரளாவை போல் தமிழகத்தில் நடக்கிறது என்று சொன்னார். ஆனால் எந்தவொரு நடிகர் பெயரையும் கூறவில்லை. எஸ்கேப் ஆகும் விதமாக என்னிடம் ஒருவர் கேட்டார், நான் செருப்பால் அடிப்பேன் என்று கூறியவுடன் ஓடி போயிட்டார் என சொல்வது. 

என்னை இந்த நபர் பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று சொன்னால் அவர் பீல்ட் அவுட். விளம்பரத்துக்காக தமிழ் சினிமாவில் பாலியல் இருக்கிறது என்று கூறுகிறார். ஏற்கனவே ஸ்ரீரெட்டி என்ற பெண்ணும் இப்படி பேசி யாரும் வாய்ப்பு தராமல் சும்மா இருந்து வருகிறார்.

முதலில் யாரும் என்னிடம் இப்படி ஒருவர் நடந்தார் என்று சொல்வதே கேவலமான விஷயம். இல்லாவிட்டால் துணிச்சலாக சொல்ல வேண்டும்.  விளம்பரத்துக்காக இதுபோன்று பேசும் விஷயங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது" என்றார்.

நன்றி: மெட்ரோ மெயில் யூடியூப் சேனல்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.