தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Actor Karthi : பருத்தி வீரன் படத்தில் தொடங்கி .. வந்தியத்தேவனாக அசத்திய நாயகன் கார்த்தி பிறந்தநாள் இன்று!

HBD Actor Karthi : பருத்தி வீரன் படத்தில் தொடங்கி .. வந்தியத்தேவனாக அசத்திய நாயகன் கார்த்தி பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
May 25, 2024 06:00 AM IST

HBD Actor Karthi : நடிகர் கார்த்தி இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பருத்தி வீரன் படத்தில் தொடங்கி .. வந்தியத்தேவனாக அசத்திய நாயகன் கார்த்தி பிறந்தநாள் இன்று!
பருத்தி வீரன் படத்தில் தொடங்கி .. வந்தியத்தேவனாக அசத்திய நாயகன் கார்த்தி பிறந்தநாள் இன்று!

ட்ரெண்டிங் செய்திகள்

கார்த்தி 1977, மே 25 ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி ஆகியோர்க்கு பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.

இவரது திருமணம் சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன், 2011 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இவர்களுக்கு உமையாள் என்ற ஒரு மகள் உண்டு.

ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநர்

இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் 3 வருட படப்பிடிப்புக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியானது.

பிரபல நடிகர் சூர்யாவின் சகோதரரான இவர், அவரின் அகரம் அறக்கட்டளை வாயிலாக, குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார். அத்துடன் உழவன் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, அதன் வாயிலாக விவசாயத்திற்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

இவரின் பல ஹிட் படங்கள் 

இவரது ரசிகர்களும் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர். பருத்திவீரன்’ திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான கார்த்தி, தொடர்ந்து ‘பையா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, 'சிறுத்தை’ , ‘நான் மகான் அல்ல’ ‘கடைக்குட்டி சிங்கம்’ ‘ கொம்பன்’ ‘மெட்ராஸ்’ ’பொன்னியின் செல்வன்’உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வளர்ந்தார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது கார்த்தி, நலன் குமாராசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இவரது கைவசம் ‘சர்தார் 2’ ‘ கைதி 2’ உள்ளிட்ட திரைப்படங்கள் இருக்கின்றன. இவரது கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது.

கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ்

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்தார். இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரணும் நடித்து வருவதாக தகவல் வெளியானது.‘வா வாத்தியாரே’ எனத் தலைப்பிட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது. இது கார்த்தியின் 26வது படமாகும்.

கார்த்தி பிறந்தநாள் இன்று

அடுத்து ‘96’ பட புகழ் ப்ரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 27-வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடர்ந்து கார்த்தி 28-வது படமாக ‘சர்தார் 2’, அதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்திலும் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்