ஃலைப்பே ரொம்ப கஷ்டம்.. நான் ரொம்ப எமோஷனல்.. அப்பா, அம்மா காயப்பட்டாங்க.. மனம் திறந்து பேசிய ஜெயம் ரவி
சிறு வயதில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டு வந்து இந்த இடத்தை நான் அடைந்துள்ளேன். என் வாழ்வில் நடந்த விஷயங்கள் அனைத்தும் என்னை சுற்றி உள்ளவர்களுக்குத் தெரியும் என நடிகர் ஜெயம் ரவி பேசியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்த சமயத்திலிருந்து பலவித கருத்துகளை அவர் எதிர்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துகளை அவர் சமாளித்து வரும் நிலையில், இவர் பிஹைண்ட்உட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் அவர் அதனை எவ்வாறு கையாளுகின்றார் என்பது குறித்தும் பேசியுள்ளார்.
எதுவும் என்னை பாதிக்காது
சோசியல் மீடியாவில், பலரும் மனதில் பட்டதை கூறி வருகின்றனர். அவர்கள் ஏதாவது பேசினால் அது என்னை பாதிக்காது. குறிப்பிட்ட சில நபர்களை மட்டுமே என் பர்சனல் வாழ்க்கைக்குள் அனுமதித்துள்ளேன். அவர்களுக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என தெரியும். அப்படிப்பட்டவர்கள் ஏதாவது என்னைப் பற்றி கூறினால் மட்டும் தான் எனக்கு வலிக்கும்.
மற்றபடி, மக்கள் என் படத்தைப் பற்றியோ, என் நடிப்பை பற்றியோ, நான் விருதுக்கு தகுதி இல்லாதவன் எனவோ கூறினால் அதை ஏற்றுக் கொண்டு, அடுத்த திரைப்படத்தில் என்னை மெருகேற்றிக் கொள்வேன். ஆனால், அவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசினால் கடந்து சென்று விடுவேன்.
முடிவு செய்பவன் நான்
என் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன். இதைப்பற்றி யாரும் பெரிதாக பேசவோ, கவலைப்படவோ வேண்டாம். என்னை சுற்றி நடக்கும் விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும். என் குடும்பத்தினர் என்னை விட முதிர்ச்சியானவர்கள். அவர்களுக்கு என்னைப் பற்றி இப்படி பேசுகிறார்கள் என்ற கவலை மட்டும் தான். ஆனால், செய்த விஷயத்திற்காக அவர்களுக்கு வருத்தம் இல்லை. ஏனென்றால் என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.
ரசிகர்களை தடுக்க முடியாது
ரசிகர்களுக்கு நல்லது கெட்டது என அனைத்தும் தெரியும். அவர்கள் பேசுவதை என்னால் தடுக்க முடியாது. அவர்கள் தான் மிகப்பெரிய சக்தி. அவர்களால், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தையும் ஹிட் கொடுக்க முடியும், கேஜஎஃப் படத்தையும் ஹிட்டாக்க முடியும். இரண்டுக்கும் சம்பந்தமில்லை. எனவே, எது சரி, எது தவறு என்பதை அவர்கள் முடிவு செய்து விடுவார்கள். இதனால் என் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. குழந்தைகள் நம்மை விட அறிவாளிகள்.
நானும் அக்காவும்
நாங்கள் மிகச் சிறிய குடும்பத்திலிருந்து வந்து, தற்போது மக்களிடம் நல்ல அந்தஸ்தை பெற்றுள்ளோம். எங்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு உள்ளோம். என் அக்காவும், நானும் கடைசி பிள்ளைகள் என்பதால் அதிக செல்லம். எனக்கு எது தேவை என்றாலும் என் அக்கா தான் பேசுவாங்க . எனக்காக அவங்க நிறைய கடிதம் எழுதி இருக்காங்க. அதை எல்லாம் படிச்சு கண் கலங்கி இருக்கேன். இப்போவும் அவங்க எனக்கு கடிதம் எழுதிட்டு தான் இருக்காங்க.
பிரதர் படம்
இப்போ தீபாவளிக்கு வரும் என்னோட பிரதர் படமும் அக்கா தம்பி உறவுமுறையை பேசும் படம். இந்த படத்தில் நிறைய காட்சிகள் என் வாழ்க்கையை பிரதிபலிப்பது போல உள்ளது எனக் கூறியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான பிரதர் படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஜெயம் ரவி பிஸியாக உள்ளார். அந்த சமயத்தில் அவர், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகள் எடுத்து பேசு பொருளானார்.
இந்த நிலையில், பிரதர் திரைப்படம் குறித்தும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஜெயம் ரவி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
டாபிக்ஸ்