Jayam ravi: “கல்யாணம் இதுக்கா பண்றோம்.. வாழ்க்கைக்கு அர்த்தம்..ஆர்த்தி மட்டும் அப்படி இல்லன்னா” - ஜெயம்ரவி விளக்கம்!
Jayam ravi: அவர்கள் தான் நீ எப்படிப்பட்டவன் நீ எப்படியான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாய் என்பதை கூற வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் அந்த பதிலுக்கான பிரதிபலிப்பு என்னுடைய மனைவி ஆர்த்தி தான். - ஜெயம் ரவி!
(1 / 6)
Jayam Ravi: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த பிரிவதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தியோ தான் ஜெயம் ரவியை விவாகரத்து செய்யவில்லை எனவும் என்னிடம் கலந்தாலோசனை செய்யாமலேயே ரவி இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் எனவும் கூறியிருந்தார்.
(2 / 6)
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி கல்யாணத்தை பற்றிய அவரது பார்வையையும், மனைவி ஆர்த்தி குறித்தும் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசி இருந்தார்.
(3 / 6)
இது குறித்து அவர் பேசும் போது, “ஆர்த்தி மட்டும் என்னுடைய வாழ்க்கைக்குள் வரவில்லை என்றால், என்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்திருக்காது. நம்முடைய வாழ்க்கையில் கல்யாணம் என்பது மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது அப்படிப்பட்ட ஒரு அங்கத்தை நாம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வி இங்கு முக்கியமானது.
(4 / 6)
அந்தக் கேள்விக்கு எனக்கு ஒரு படத்தில் வந்த வசனம் என்னை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. அதில், நீ எப்படி வாழ்ந்து இருக்கிறாய் என்பதை நீ சொல்லக்கூடாது. ஏனென்றால் நீ உனக்கு ஆதரவாக பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உன் உடன் இருப்பவர்கள் தான் நீ எப்படி வாழ்ந்து இருக்கிறாய் என்பது குறித்து சொல்ல வேண்டும்.
(5 / 6)
அவர்கள் தான் நீ எப்படிப்பட்டவன் நீ எப்படியான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாய் என்பதை கூற வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் அந்த பதிலுக்கான பிரதிபலிப்பு என்னுடைய மனைவி ஆர்த்தி தான்.
மற்ற கேலரிக்கள்