மீண்டும் மீண்டுமா? 3 ஆவது முறையாக ஆஜர் ஆகாத தனுஷ் ஐஸ்வர்யா! என்ன தான் நடக்குது!
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தாக்கல் செய்த பரஸ்பர விவகாரத்து வழக்கில் விசாரணை இன்று வந்த நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஆஜர் ஆக வில்லை.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தாக்கல் செய்த பரஸ்பர விவகாரத்து வழக்கி விசாரணை இன்று வந்த நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஆஜர் ஆக வில்லை. தமிழ் தெலுங்கு ஹிந்தி என நடிப்பு மற்றும் இயக்குனராகி கலக்கி வரும் நடிகர் தனுஷ் அவரது மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கில் இன்று மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை.இந்நிலையில் இந்த வழக்கு வரும் நவம்பர் பணி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா
இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் ஐஸ்வர்யா அவரது படங்களை வாழ்த்தி பூங்கொத்து அனுப்பி வைத்தார் இதனை தொடர்ந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பு மலர்ந்து பின்னர் அது காதலாக மாறியது மேலும் இருவரின் காதலும் பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 24 ஆம் ஆண்டு நடந்தது இவர்களுக்கு யாத்ரா, லிங்கா இரு மகன்களும் உள்ளனர் கிணியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர்.
இருப்பினும் இருவரும் நட்புடன் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர். மகன்களின் பள்ளி விழாவிலும் இருவரும் சேர்ந்து பங்கெடுத்தும் வந்தனர். மேலும் இவர்களது பிரிவிற்குப் பின் பலரும் இவர்களை சேர்த்தது வைக்க முயற்சி வைத்ததாக தகவல் வெளியாகியது.
மூன்றாவது முறையாக ஆஜர் ஆகவில்லை
தனுஷ் மற்றும் ஐஷ்வர்யா இருவரும் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு கடந்த அக்டோபர் 7 ஆம்தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராக வில்லை. அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 19-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அந்த நாளும் இரு தரப்பினரும் ஆஜாராக வில்லை. பின்னர் நீதிபதி வழக்கை இன்று(நவம்பர் 2 ) விசாரிக்க ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை. வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து 3 -வது முறையாக தனுஷூம் ஐஸ்வர்யாவும் ஆஜராகதது பேசு பொருளாகியுள்ளது. நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு விசாரணையை நவ.21-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வேலை காரணமாக வரவில்லையோ?
தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படம் நல்ல வசூல் பெற்றுள்ள நிலையில், அதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது இட்லி கடை எனும் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் நித்யா மேனன் இணைந்துள்ளார். இதற்கு முந்தைய நித்யா மேனன் மற்றும் தனுஷ் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்தியாமேனன் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது வெளியாக இருக்கும் குபேரா படமும் படப்பிடிப்பு முடிந்தாகி விட்டது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு, இயக்கம், நடிப்பு என எல்லாவற்றிலும் பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். இவரது வேலை காரணமாக ஆஜாராக முடிய வில்லையோ என சந்தேகம் எழுந்துள்ளது.
டாபிக்ஸ்