Metti Oli 2: ரெடியான டீம், விரைவில் படப்பிடிப்பு! புத்தம் புதிய கதை களத்துடன் மீண்டும் வருகிறது மெட்டி ஒலி-metti oli 2 serial shooting to begins soon and will telecast in sun tv - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Metti Oli 2: ரெடியான டீம், விரைவில் படப்பிடிப்பு! புத்தம் புதிய கதை களத்துடன் மீண்டும் வருகிறது மெட்டி ஒலி

Metti Oli 2: ரெடியான டீம், விரைவில் படப்பிடிப்பு! புத்தம் புதிய கதை களத்துடன் மீண்டும் வருகிறது மெட்டி ஒலி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 07, 2024 02:40 PM IST

ரசிகர்களின் பேவரிட் டிவி தொடராக இருந்து வந்த மெட்டி ஒலி சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடரை கோபி இயக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மெட்டி ஒலி சீரியல்
மெட்டி ஒலி சீரியல்

இந்த தொடரை திருமுருகன் இயக்கியிருந்தார். இதில் சேத்தன், காயத்ரி, டில்லி குமார், காவேரி, தீபா வெங்கட், நீலிமா ராணி, போஸ் வெங்கட், சாந்தி வில்லியம்ஸ் உள்பட பலரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். திருமுருகனும், கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த தொடருக்கு பின் அவர் கோபி என்ற ரசிகர்களாலும் அழைக்கப்பட்டார்.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இந்த தொடரின் இரண்டாம் பாகமாக மெட்டி ஒலி 2 தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சன்டிவியிலேயே ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மெட்டி ஒலி 2 தொடரை விக்ரமாதித்யன் என்பவர் இயக்கவுள்ளராம். அதேபோல் இந்த பாகத்தில் புதுமுக நடிகர்கள் பலர் நடிக்கவுள்ளதாகவும், முதல் பாகத்தில் இடம்பிடித்த நடிகர்கள் சிலரும் நடிக்க இருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.