Marmadesam actor lokesh:குடும்ப பிரச்னை…மர்மதேசம் நடிகர் லோகேஷ் தற்கொலை பின்னணி-tamil tv actor lokesh rajendran dies by suicide due to family problem - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marmadesam Actor Lokesh:குடும்ப பிரச்னை…மர்மதேசம் நடிகர் லோகேஷ் தற்கொலை பின்னணி

Marmadesam actor lokesh:குடும்ப பிரச்னை…மர்மதேசம் நடிகர் லோகேஷ் தற்கொலை பின்னணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 06, 2022 11:42 PM IST

மனைவியுடன் பிரிவு, குடும்ப பிரச்னை என கடும் மனஉளைச்சலில் இருந்த மர்மதேசம் புகழ் லோகேஷ் ராஜேந்திரன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்துள்ளார்.

<p>விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட மர்மதேசம் புகழ் லோகேஷ் ராஜேந்திரன்&nbsp;</p>
<p>விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட மர்மதேசம் புகழ் லோகேஷ் ராஜேந்திரன்&nbsp;</p>

தற்போது உதவி இயக்குநராக இருக்கும் லோகேஷ் ஏராளமான குறும்படங்களை இயக்கியுள்ளார். திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்ட அவர் அதற்காக தனது நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் பணம் திரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இவர் 2011இல் அனிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். இதனால் கடும் மனம் உளைச்சலில் இருந்த லோகேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தனது தாயுடன் காஞ்சிபுரத்தில் வாசித்து வந்த அவர் சென்னைக்கு பேருந்தில் வரும்போது விஷம் அருந்தியதாக தெரிகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த அவர் அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் செய்ததில் லோகேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், லோகேஷ் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பல்வேறு குடும்ப பிரச்னையால் லோகேஷ் கடந்த சில மாதங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர், காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வரும்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

லோகேஷின் தற்கொலைக்கு குடும்ப பிரச்னை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து லோகேஷின் தந்தை தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது மகன் லோகேஷ், மனைவியுடன் மாடம்பாக்கத்தில் வசித்து வந்தார். நான் வில்லிவாக்கத்தில் வசித்து வந்தேன். திருமணத்துக்கு பிறகு லோகேஷ் என்னுடனான தொடர்பை துண்டித்துக்கொண்டார். இதுவரை இருமுறை மட்டுமே என்னை சந்தித்துள்ளார். இறுதியாக கடந்த சனிக்கிழமை என்னை சந்திக்க வந்த லோகேஷ், என்னிடம் பணம் வேண்டும் என கேட்டுப்பெற்று சென்றார். அதன்பிறகு எங்கு சென்றார்? என்பது பற்றி எனக்கு தெரியாது.

அவருக்கு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்னை குறித்து எனக்கு தெரியாது. விவாகரத்து குறித்து நோட்டீஸ் வந்த பிறகே கடந்த 6 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்வது பற்றி எனக்கு தெரிந்தது. கடந்த திங்கள்கிழமை போலீசார் தகவல் தெரிவித்த பிறகே லோகேஷ் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு தெரியவந்தது.

மர்ம தேசம் தொடர் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி தெலுங்கில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பெற்றுள்ளார் லோகேஷ். முன்னணி நடிகர்களுடன் 150க்கும் மேற்பட்ட தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் எம்.ஆர்.ராதாவின் தம்பி மகன் நான். மிகப்பெரும் நடிகரின் பரம்பரையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சொந்த முயற்சியில் எனது மகனை நடிப்பில் முன்னேற வைத்தேன்.

லோகேஷ் மனைவி அனிஷா, பார்வையாளர் போல் வந்து பார்த்துவிட்டு லோகேஷ் உடல் தங்களுக்கு வேண்டாம் என தடையில்லா சான்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். உடற்கூராய்வு முடிந்து மகன் உடலை வில்லிவாக்கத்தில் உள்ள எனது வீட்டுக்கு எடுத்துச்செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.