தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Ajith Kumar Was Happy To Feed Birthday Cake To Cricketer Natarajan Alias Nattu

Nattu and AK: ‘கொஞ்சம் சாப்பிடுங்க நட்டு..’ நடராஜனின் 33ஆவது பிறந்த நாள் விழா.. சர்ப்ரைஸாகப் பங்கேற்று கேக் ஊட்டிய அஜித்

Marimuthu M HT Tamil
Apr 04, 2024 01:20 PM IST

- Nattu and AK: கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்த நாளில் கலந்துகொண்ட, நடிகர் அஜித் குமார், அவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பிறந்த நாள் கேக் ஊட்டி மகிழ்ந்த அஜித்குமார்!
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பிறந்த நாள் கேக் ஊட்டி மகிழ்ந்த அஜித்குமார்!

ட்ரெண்டிங் செய்திகள்

சேலம் அருகிலுள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர், கிரிக்கெட் வீரர் நடராஜன். அவரது தந்தை தங்கராசு ஒரு விசைத்தறி நெசவாளர் ஆவார். அவரது தாய், சிக்கன் பொரித்து விற்பனை செய்துவந்தவர் ஆவார். மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்த, நடராஜன், 2014-15ஆம் ஆண்டு ரஞ்சி டிராஃபிக்காக, தமிழ்நாட்டின் சார்பில் அறிமுகம் ஆனவர். அதன்பின், 2018-19ஆம் ஆண்டு, விஜய் ஹசாரே டிராஃபியில் தமிழ்நாட்டின் ஏ அணி சார்பாக விளையாடினார். 

அதன்பின், பிப்ரவரி 2017-ல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் ரேஸில் அவரது பெயர் அடிபட்டது. அடுத்து நடராஜனை, பஞ்சாப் அணி ரூ.3 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அதனைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி நடராஜனை ஏலத்தில் எடுத்தது.

இருந்தாலும் தொடர்ச்சியாக, இந்திய அணிக்கு விளையாடவேண்டும் என்று வெறித்தனமாக உழைத்த அவருக்கு, 26 அக்டோபர் 2020அன்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. அதன்பின், முதன்முதலாக டிசம்பர் 2ஆம் தேதி 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாண்டார்.

அதன்பின், அதே வெளிநாட்டுத்தொடரில் டி20 போட்டியில் அறிமுகம் ஆனார். பின், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், இந்திய கிரிக்கெட் வீரராக இருந்தார், நடராஜன். அதன்பின், 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிக்காக விளையாண்டு வருகிறார்.

நடராஜன், தனது நீண்டநாள் பள்ளித்தோழியான பவித்ராவை ஜூன் 2018ல் மணந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் உள்ளார்.

டெத் ஓவர் எனப்படும் இறுதி ஓவர்களில் யாக்கர் பந்துகளை வீசி விக்கெட்களை வீழ்த்துவதில் நடராஜன் கெட்டிக்காரர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜன், இன்று தனது 33ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதற்கான நள்ளிரவு பார்ட்டி, ஹைதராபாத்தில் நடந்தது. 

அதில் கலந்துகொண்ட அஜித் குமார், கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். 

மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தற்போது ஏகே 63 படத்தில் நடித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' என சமீபத்தில் அப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு 2024 ஜூன் மாதம் தொடங்கி 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்துக்குண்டான இசையினை தேவி ஸ்ரீபிரசாத் புரிகிறார்.

முன்னதாக, நடிகர் அஜித், த்ரிஷா, அர்ஜுன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் சேர்ந்து நடித்து வரும் ‘’ விடாமுயற்சி’’ திரைப்படம் இறுதிகட்டப் படப்பிடிப்பு நிலையை எட்டியுள்ளது. இதற்காக, அப்படக்குழுவினர் வெகுநாட்களாக அஜர்பைஜானில் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், நடிகர் அஜித்தின் காது மற்றும் மூளைக்கு இடையில் வீங்கிய நரம்புக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து கிரிக்கெட் வீரராக மாறியுள்ள நடராஜனின் பிறந்த நாளில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பங்கேற்று அவருக்கு கேக் ஊட்டி, ஊக்கப்படுத்தியுள்ளார், நடிகர் அஜித். இது அனைத்து தரப்பினராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும், நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் ஆவார். மேலும் அவருக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினை சார்ந்த நடராஜனையும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்