Ajith Kumar: பான் இந்தியா ஸ்டார் ஆகிறாரா அஜித்... இயக்குநர் இவர் தானாம்... கசிந்த தகவல்-actor ajith kumar tie up with pan india director prashanth neel - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: பான் இந்தியா ஸ்டார் ஆகிறாரா அஜித்... இயக்குநர் இவர் தானாம்... கசிந்த தகவல்

Ajith Kumar: பான் இந்தியா ஸ்டார் ஆகிறாரா அஜித்... இயக்குநர் இவர் தானாம்... கசிந்த தகவல்

Malavica Natarajan HT Tamil
Sep 26, 2024 05:23 PM IST

Ajith Kumar: இந்திய சினிமாவில் பான் இந்திய இயக்குநராக உள்ள ஒருவருடன் நடிகர் அஜித் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Ajith Kumar: பான் இந்தியா ஸ்டார் ஆகிறாரா அஜித்... இயக்குநர் இவர் தானாம்... கசிந்த தகவல்
Ajith Kumar: பான் இந்தியா ஸ்டார் ஆகிறாரா அஜித்... இயக்குநர் இவர் தானாம்... கசிந்த தகவல்

கே.ஜி.எஃப் இயக்குநருடன் கைகோர்க்கும் அஜித்

இந்நிலையில், கேஜிஎஃப் திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரசாந்த் நீலுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ரஜினி- கமலுக்கு பின் ரசிகர்களால் அதிகம் ஆவலாக பார்க்கப்படுவது விஜய்- அஜித் திரைப்படங்கள் தான். இவர்கள் இருவரின் படங்கள் வெளிவந்தாலே ரசிகர்கள் கொண்ட்டாட்டத்தில் குதித்து விடுவர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே, விஜய், அஜித் இருவரும் வருடத்திற்கு 2 படங்களையாவது கொடுத்து வந்தனர்.

அப்டேட் தேடும் ரசிகர்கள்

ஆனால், சமீப காலங்களில் நடிகர் அஜித்தின் படங்கள் குறித்து அப்டேட் பெறுவதே ரசிகர்களுக்கு குதிரைக் கொம்பாக மாறியுள்ளது. இதற்கு உதாரணம் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நேரம், காலம், இடம் பார்க்காமல், யாரிடம் அப்டேட் கேட்பது என தெரியாமல் அனைத்து இடங்களிலும் அப்டேட் கேட்டு காத்து நின்றது தான். பின் அந்தப் படம் வெளியான நிலையில், அடுத்து அவர் நடித்த துணிவு படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர்.

நிலமை இப்படி இருக்க, நடிகர் அஜித் இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி எனும் படத்தில் நடித்து வந்தார். அந்த படம் அறிவிக்கப்பட்ட பின் படப்பிடிப்பு தொடங்கியதா, எந்த அளவு படப்பிடிப்பு முடிந்துள்ளது, எப்போது வெளியாகும் என எந்தத்தகவலும் கிடைக்காமல் ரசிகர்கள் தவித்து வந்தனர். இதற்கிடையில், அஜித் சூட்டிற்கு செல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தகவல் மட்டும் வந்த வண்ணமாக இருந்தது.

பின் அவர் ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது, விடாமுயற்சி படத்தின் சூட்டிங் முடிந்ததால், அவர் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார் எனவும் தெரியவந்தது. இந்த சமயத்தில் தான் அப்டேட்டிற்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்காகவே சுடச்சுட கசிந்துள்ளது இந்த செய்தி.

பான் இந்தியா ஸ்டார் ஆகிறாரா அஜித்

கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா இயக்குநராக அறியப்பட்டவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது நடிகர் அஜித்திற்காக கதை ஒன்றை தயாரித்துள்ளார்.

அந்த கதையின் நாட் அஜித்திற்கு பிடித்துபோன நிலையில், இந்தக் கதையை அவர் ஓகே சொல்லி உள்ளாராம்.

இதையடுத்து, நடிகர் அஜித் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புகளையும், இயக்குநர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆரை வைத்து எடுத்துள்ள படத்தின் வேலைகள் முடிந்த பின்னும், இந்த புதிய படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனராம்.

இந்தப் படத்திற்கும் கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாலே நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். இந்த தகவலால், வரும் காலத்தில் நடிகர் அஜித்தும் பான் இந்தியா நடிகராக வலம் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இயக்குநர் இதற்கு முன் கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப்-2, சலார் போன்ற பான் இந்தியா திரைப்படத்தை இயக்கி பெரும் வசூல் வேட்டையை நடத்தியுள்ளார். மேலும், தற்போது கே.ஜி.எஃப்-3 திரைப்படத்திற்கான பணிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.