Tamil Serial Actor: டார்க் ஷேட் நடிகர்..மறக்க முடியுமா கோலங்கள் பாஸ்கர்! எதார்த்த நடிப்பால் கவர்ந்த நடிகர் அபிஷேக்-actor abishek shankar who influence with his dark shade roles in tamil serials - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Serial Actor: டார்க் ஷேட் நடிகர்..மறக்க முடியுமா கோலங்கள் பாஸ்கர்! எதார்த்த நடிப்பால் கவர்ந்த நடிகர் அபிஷேக்

Tamil Serial Actor: டார்க் ஷேட் நடிகர்..மறக்க முடியுமா கோலங்கள் பாஸ்கர்! எதார்த்த நடிப்பால் கவர்ந்த நடிகர் அபிஷேக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 22, 2024 06:01 PM IST

தமிழ் சீரியல்களில் தனது எதார்த்த நடிப்பால் கவர்ந்தவர் அபிஷேக் ஷங்கர். டார் ஷேட் கதாபாத்திரங்களில் தோன்றி திருப்புமுனை தரும் நடிகராக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். கோலங்கள் பாஸ்கர் என்று அறியப்பட்ட அவரை பற்றி பின்னணியை பார்க்கலாம்.

Tamil Serial Actor: டார்க் ஷேட் நடிகர்..மறக்க முடியுமா கோலங்கள் பாஸ்கர்! எதார்த்த நடிப்பால் கவர்ந்த நடிகர் அபிஷேக்
Tamil Serial Actor: டார்க் ஷேட் நடிகர்..மறக்க முடியுமா கோலங்கள் பாஸ்கர்! எதார்த்த நடிப்பால் கவர்ந்த நடிகர் அபிஷேக்

சினிமாவில் அறிமுகம்

முன்னாள் ஐஏஎஸ் ஆபிசரும், இயக்குநருமான ஞானராஜசேகரன் இயக்கிய மோகமுள் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அபிஷேக். எழுத்தாளர் தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் அதே பெயரில் உருவாகியிருக்கும். அப்பாவித்தனமான கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய போதிலும் அபிஷேக்குக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் அமையாமல் போனது.

சீரியல் வாய்ப்பு

பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிப்பில் சன்டிவியில் ஒளிபரப்பான குடும்பம் என்ற சீரியலில் நடிப்புக்கு கம்பேக் கொடுத்தார் அபிஷேக். டார்க் ஷேட் பொருந்திய கேரக்டரில் தோன்ற தனது வித்தியாச நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பான ஆனந்தபவன்,அலை ஓசை, குங்குமம், ராஜ ராஜேஷ்வரி, மனைவி போன்ற தொடர்களில் நடித்தார்.

ஒவ்வொரு தொடர்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றி தனது நடிப்பால் சின்னிதிரை ரசிகர்களின் பேவரிட் நடிகரானார். சீரியல்கள் மூலம் பெற்ற பிரபலம் காரணம் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

இதில் 2007இல் வெளியான அம்முவாகிய நான் படத்தில் இவரது கேரக்டர் பேசப்பட்டது.

திருப்பம் தந்த கோலங்கள் சீரியல்

அபிஷேக் கேரியரில் திருப்பம் தந்த தொடராக சன்டிவியின் கோலங்கள் தொடர் அமைந்தது. இதில் அவரது கதாபாத்திரமான பாஸ்கர் மிகவும் பேமஸ் ஆனது. இந்த கேரக்டரில் நடித்த பிறகு பாஸ்கர் என்றே பலராலும் அழைக்கப்பட்டார்.

தேவையானியின் கணவர், முன்னாள் கணவர் கதாபாத்திரத்தில் தோன்றிய அபிஷேக் வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார்.

இதன் பின்னர் சன்டிவியில் ராதிகா சரத்குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ஒளிபரப்பான செல்லமே என்ற சீரியலிலும், ரம்யா கிருஷ்ணன் நடித்த தங்கம் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

சன் டிவி தவிர ஜெயாடிவியில் பிரபலமான கல்கி, கிரிஜா எம்ஏ, மாயா தொடர்களிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலிலும் நடித்துள்ளார்.

தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் மீனா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 

முக்கிய வேடங்களில் கலக்கும் அபிஷேக்

கோலங்கள் வெற்றிக்கு பிறகு சினிமாக்களில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வரும் அபிஷேக் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தோன்றி வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள, வந்தா ராஜாவாத்தான் வருவேன் படங்களிலும், மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் திருப்புமுனை தரும் கதாபாத்திரத்திலும், கா பே ரணசிங்கம் படத்தில் அரசு அதிகாரியாக வில்லத்தனத்திலும் மிரட்டியிருப்பார்.

2010இல் கதை என்ற பெயரில் திரைப்படம் ஒன்றையும் இயக்கி கவனம் ஈர்த்தார். கலவையான விமர்சனங்கள் பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.

தமிழ் சீரியல்களில் திருப்புமுனை தரும் டார்க் ஷேட் கதாபாத்திரங்களில் தோன்றி ரசிக்க வைத்த நடிகராக இருந்த அபிஷேக், சினிமாக்களிலும் வித்தியாசமான கேரக்டர்களில் தோன்றி நடிப்பில் ரசிக்க வைத்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.