"நான் அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்"- ஐஸ்வர்யா ராய்க்காக உருகிய கணவர்.. வதந்திகளுக்கு எல்லாம் எண்டு கார்டு..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "நான் அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்"- ஐஸ்வர்யா ராய்க்காக உருகிய கணவர்.. வதந்திகளுக்கு எல்லாம் எண்டு கார்டு..

"நான் அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்"- ஐஸ்வர்யா ராய்க்காக உருகிய கணவர்.. வதந்திகளுக்கு எல்லாம் எண்டு கார்டு..

Malavica Natarajan HT Tamil
Nov 30, 2024 02:33 PM IST

ஐஸ்வர்யா ராய் எங்கள் குழந்தைகளை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொள்வதற்காக நான் அவருக்குக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன் என நடிகர் அபிஷேக் பச்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

"நான் அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்"- ஐஸ்வர்யா ராய்க்காக உருகிய கணவர்.. வதந்திகளுக்கு எல்லாம் எண்டு கார்டு..
"நான் அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்"- ஐஸ்வர்யா ராய்க்காக உருகிய கணவர்.. வதந்திகளுக்கு எல்லாம் எண்டு கார்டு..

ஐஸ்வர்யா ராய் பற்றி பேசிய அபிஷேக் பச்சன்

இவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பொறாமைப்படும் தம்பதிகளாக தெரிந்த இவர்கள், சில நாட்களாக ஏகப்பட்ட கிசிகிசுக்களில் சிக்கி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் பொது வெளியில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்காத நிலையில், சமீபத்தில் அபிஷேக் பச்சன், தனது மனைவி ஐஸ்வர்யா ராய் குறித்து பொது நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

நன்றிக் கடன் பட்டுள்ளேன்

அப்போது, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் என் மனைவி ஐஸ்வர்யா ராய் எங்கள் மகள் ஆராத்யாவை மிகவும் கவனிப்போடு பார்த்து வருகிறார். அவர் பொறுப்பான மற்றும் தியாகம் நிறைந்த தாயாக இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு அதற்காக நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். அவர் என் குழந்தையை உடனிருந்து பார்த்துக் கொள்வதால் தான் என்னால் வெளியே சென்று படத்தில் தைரியமாக நடிக்க முடிகிறது.

எனக்கா என் அம்மா சினிமாவை விட்டார்

நான் பிறந்தபோது, என்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக என் அம்மா சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். அதனால் தான் என் அப்பா நிம்மதியாக வேலை செய்தார். என் அப்பா என்னுடன் இல்லாததை நான் உணரக் கூடாது என்பதற்காக என் அம்மா மிகவும் கஷ்டப்படுவார்.

ஆண்களின் பிரச்சனை இதுதான்

தன் பிள்ளைகளுக்காக அம்மா செய்யும் தியாகத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அப்பாக்களுக்கு சரியாக அவர்களின் அன்பைக் கூட வெளிப்படுத்தத் தெரியாது. இதுதான் அவர்களிடமிருக்கும் பெரிய பிரச்சனை எனக் கூறியுள்ளார்.

அபிஷேக் பச்சன் சமீபத்தில் நடித்துள்ள ஐ வாண்ட் டூ டாக் எனும் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக தி இந்து நாழிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார், இந்தப் பேட்டியின் மூலம், சில வருடங்களாக அபிஷேக் பச்சனை சுற்றி வரும் விவாகரத்து வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்திருப்பது தெரிகிறது.

வாரிசு நடிகர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் அபிஷேக் பச்சன். பின் அவர், தன் நடிப்புத் திறனை மெருகேற்றி, பாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக மாறும் அளவிற்கு வளர்ந்தார்.

ஐஸ்வர்யா ராயுடன் திருமணம்

இதற்கிடையில், தன்னை விட வயதில் மூத்தவரான நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ள நிலையில், சமீப காலமாக அபிஷேக் பச்சன் மீது பல எதிர்மறாயான கருத்துகளும், வதந்திகளும் பரவி வருகின்றன.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.