நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. தன் காதல் கணவர் அஜித்துடன் வெளிநாடுகளில் சுற்றும் ஷாலினி.. செம ரொமான்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. தன் காதல் கணவர் அஜித்துடன் வெளிநாடுகளில் சுற்றும் ஷாலினி.. செம ரொமான்ஸ்

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. தன் காதல் கணவர் அஜித்துடன் வெளிநாடுகளில் சுற்றும் ஷாலினி.. செம ரொமான்ஸ்

Marimuthu M HT Tamil Published Oct 07, 2024 08:31 AM IST
Marimuthu M HT Tamil
Published Oct 07, 2024 08:31 AM IST

Ajith - Shalini: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. தன் காதல் கணவர் அஜித்துடன் வெளிநாடுகளில் சுற்றும் ஷாலினியின் செம ரொமான்ஸ் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. தன் காதல் கணவர் அஜித்துடன் வெளிநாடுகளில் சுற்றும் ஷாலினி.. செம ரொமான்ஸ்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. தன் காதல் கணவர் அஜித்துடன் வெளிநாடுகளில் சுற்றும் ஷாலினி.. செம ரொமான்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், அஜித். இவர் தனது மனைவி நடிகை ஷாலினியை காதலித்து கரம்பற்றி 25 ஆண்டுகளைத் தாண்டி வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் இந்த நட்சத்திர ஜோடிக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை உண்டு. புதிதாக காதலிப்பவர்கள் கூட, அஜித் - ஷாலினி போல், நமது காதலும் நிலைக்கவேண்டும் என நினைப்பது உண்டு. இந்நிலையில் நடிகர் அஜித் குமாரும், ஷாலினியும் காதலிக்கத் தொடங்கி 25ஆண்டுகளை நிறைவுசெய்ததைக் கூட, தங்களது நண்பர்களோடு சேர்ந்து சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அஜித் - ஷாலினி காதல் கதை:

நடிகர் அஜித், சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ஷாலினியுடன் ஜோடியாக நடித்த படம்தான், அமர்க்களம். இப்படத்தில் ஒரு காட்சியில் அஜித், தன் கையில் கத்தியை வைத்து அறுக்க முயற்சிக்கையில், அது உண்மையிலேயே அறுத்துவிட்டதாம். இதனால், பதறிப்போன, ஷாலினி, அவரை நன்கு பார்த்துக்கொண்டாராம். இதில் இம்ப்ரஸ் ஆன அஜித், ஷாலினியிடம் தன் காதலைச் சொல்ல, படப்பிடிப்புத் தளத்திலேயே ஓகே சொல்லியிருக்கிறார்.

மேலும்,1999ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்த நாள் பரிசாக எண்ணற்ற பரிசுப்பொருட்களை, இயக்குநர் சரண் மூலம் அஜித்திடம் கொண்டு சேர்த்திருக்கிறார், ஷாலினி. இதனால் நெகிழ்ந்துபோன அஜித் தனது காதல் குறித்து, தன் பெற்றோரிடமும் அஜித்தின் பெற்றோரிடமும் பேசி, திருமணம் செய்துகொள்ள சம்மதம் பெற்றுள்ளார். அப்போது அஜித் பெரிய நடிகராக இல்லையென்றாலும், மகள் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, ஷாலினியின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார், ஷாலினியின் தந்தை.

அதன்பின் ஏப்ரல் 24, 2000ஆம் ஆண்டு, சென்னையில் வைத்து அஜித் - ஷாலினி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகன்போல் அஜித்தின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின், சினிமாவில் இருந்து விலகி, குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆர்வம் காட்டினார், ஷாலினி.

அஜித்தின் ஏற்ற இறக்கங்களில் பயணித்த ஷாலினி:

அதன்பின் அஜித் வாழ்வில் கிடைத்த எண்ணற்ற ஏற்ற இறக்கங்கள், படத்தோல்விகள், இழிவான சொல்கள் இதையெல்லாம் இருவரும் சேர்ந்தே அனுபவித்தனர். அஜித்தும் மோட்டார் ரேஸில் ஈடுபட்டு எண்ணற்ற அறுவை சிகிச்சைகளுக்கு ஆளானார். அஜித் - ஷாலினி தம்பதியினர் 8 ஆண்டுகளுக்குப்பின்னர், அனோஷ்கா என்னும் பெண் குழந்தையைப் பெற்றனர். அதன்பின் அஜித் - ஷாலினி தம்பதியினர் 7 ஆண்டுகள் கழித்து, ஆத்விக் என்னும் ஆண் குழந்தையைப் பெற்று எடுத்தனர். திருமணமாகி 25ஆண்டுகளைக் கடந்த பின்னும் அதே காதல் குறையாமல் சுற்றி வருகின்றனர். அப்படி சமீபத்தில் வெளிநாடு சென்று இருக்கும் அஜித் - ஷாலினி தம்பதியினர், அங்கு இருக்கும் இடங்களை ஒன்றாக சேர்ந்தே சுற்றிப் பார்க்கின்றனர். அதுகுறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள ஷாலினி, ’காதலருடன் ஒன்றாக இருப்பதற்கு ஒரு அற்புதமான இடம்’ தனது கணவர் அஜித் குமாருடன் இருந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்தின் சினிமா வருகை

பிரேம புஸ்தகம் என்னும் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாலும், தமிழில் அஜித் முதல்முறையாக நடித்து ரிலீஸான திரைப்படம், அமராவதி ஆகும். அன்றிலிருந்து குட் பேட் அக்லி படப்பிடிப்பு வரை, பழகுவதற்கு எளிமையானவராக அஜித் இருப்பதாகவும், நிறையபேருக்கு சத்தமில்லாமல் உதவி வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அஜித், பயணங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது குறித்துப் பேசிய வீடியோ வைரல் ஆகியது குறிப்பிடத்தக்கது.