13 Years Of Ko: பத்திரிகையாளர்களால் நிகழும் ஆட்சி மாற்றம்.. தவறான நபரின் தலைமையை ஊடக இளைஞர் என்ன செய்தார் என்பதே 'கோ’
- கோ திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது தொடர்பான கட்டுரை..

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா பாஜ்வாய் ஆகியோர் நடித்து, ஏப்ரல் 22ஆம் தேதி 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான், கோ. இப்படத்துக்கான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியிருந்தார். ஒளிப்பதிவினை ரிச்சர்ட் எம். நாதன் செய்திருந்தார்.
கோ திரைப்படத்தின் கதை என்ன? அஸ்வின் குமார், தின அஞ்சல் செய்தித்தாளில் வேலைசெய்யும் புகைப்பட பத்திரிகையாளர். உள்ளூர் வங்கியில் நக்ஸலைட்டுகள் கொள்ளையடிப்பதை துரத்திச் சென்று படம்பிடிக்கிறார். அப்போது கொள்ளையர்கள் அவரது கேமராவை பறிக்க முயற்சிக்கின்றனர். இதையறியாத ரேணுகா என்னும் பெண், அவன் திருடன் என நினைத்து, அவனைப் பிடித்து, அவரது கேமராவை நக்ஸலைட்டுகள் பெற உதவுகிறார். இருந்தாலும், கேமராவில் இருந்த மெமரி கார்டை லாவகமாக எடுத்துவிடுகிறார், அஸ்வின். அவனது புகைப்படங்கள் தின அஞ்சல் செய்தித்தாளில் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன. அதன்பின், அங்கு வரும் புகைப்பட பத்திரிகையாளர் அஸ்வினின் செயல்பாடுகளுக்கு, சக பத்திகையாளர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கிறது. இது புதிதாக ’தின அஞ்சல்’ செய்தித்தாளில் பணிக்குச் சேர்ந்த ரேணுகாவுக்கு தர்மசங்கடம் ஆகிறது. தற்போது அஸ்வின், ரேணுகாவைப் பற்றி அறிந்துகொள்கிறாள். பத்திரிகையாளர் என அறிந்ததுமே, ரேணுகா மீது அஸ்வினுக்கு காதல் வந்துவிடுகிறது. இதனிடையே அந்த அலுவலகத்தில் பணிபுரியும் சரஸ்வதி என்கிற ‘சரோ’வும், அஸ்வினை ஒரு தலையாகக் காதலிக்கிறார்.
இதற்கிடையே ஆளவந்தான் என்னும் எதிர்க்கட்சித்தலைவர் பற்றிய தில்லுமுல்லுகளை தோலுரிக்கும் கட்டுரைகளை எழுதுகிறார், ரேணுகா என்கிற ரேணு. இந்த கட்டுரை வெளியானதும் தனது ஆட்களுடன் தின அஞ்சல் அலுவலகத்துக்கு வந்து மிரட்டுகிறார், ஆளவந்தான். மேலும் இதற்கு ஆதாரமாக இருந்த வாய்ஸ் ரெக்கார்டிங்கினை திருகு வேலை செய்து அழித்துவிடுகிறார், ஆளவந்தான். இதனால் சரியான ஆதாரமின்றி செய்திக்கட்டுரை வெளியிட்டதாக, ரேணு பணியில் இருந்து நீக்கப்படுகிறார்.