கங்குவா ஆடியோ லாஞ்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.. விரைவில் வெளியீடு.. ரிலீஸுக்கு பந்தக்கால் போட்ட படக்குழு
கங்குவா ஆடியோ லாஞ்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.. விரைவில் வெளியீடு.. ரிலீஸுக்கு பந்தக்கால் போட்ட படக்குழு குறித்து பார்ப்போம்.

கங்குவா ஆடியோ லாஞ்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.. விரைவில் வெளியீடு.. ரிலீஸுக்கு பந்தக்கால் போட்ட படக்குழு
கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். இது தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும். இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், கிச்சா சுதீப், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். கங்குவா திரைப்படத்தின் டைட்டிலை, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இப்படம் வரக்கூடிய நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 3500 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.