Amitabh Bachchan: பாலிவுட் பிக் பி அமிதாப்-க்கு வேட்டையனில் என்ன பெயர்.. ஆர்ப்பரிக்கும் அஜித் ரசிகர்கள்.. என்னவாம்?-what is the name of vettaiyan for bollywood big b amitabh bachchan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amitabh Bachchan: பாலிவுட் பிக் பி அமிதாப்-க்கு வேட்டையனில் என்ன பெயர்.. ஆர்ப்பரிக்கும் அஜித் ரசிகர்கள்.. என்னவாம்?

Amitabh Bachchan: பாலிவுட் பிக் பி அமிதாப்-க்கு வேட்டையனில் என்ன பெயர்.. ஆர்ப்பரிக்கும் அஜித் ரசிகர்கள்.. என்னவாம்?

Marimuthu M HT Tamil
Sep 19, 2024 11:55 PM IST

Amitabh Bachchan: பாலிவுட் பிக் பி அமிதாப்-க்கு வேட்டையனில் என்ன பெயர்.. ஆர்ப்பரிக்கும் அஜித் ரசிகர்கள்.. என்ன பெயர் என்பதுகுறித்துப் பார்ப்போம்.

Amitabh Bachchan: பாலிவுட் பிக் பி அமிதாப்-க்கு வேட்டையனில் என்ன பெயர்.. ஆர்ப்பரிக்கும் அஜித் ரசிகர்கள்.. என்னவாம்?
Amitabh Bachchan: பாலிவுட் பிக் பி அமிதாப்-க்கு வேட்டையனில் என்ன பெயர்.. ஆர்ப்பரிக்கும் அஜித் ரசிகர்கள்.. என்னவாம்?

'ஜெய் பீம்’ பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ’வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்தார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம், கடப்பாவில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சூட்டிங்கினை முடித்துவிட்டு, இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பத்ரிநாத், கேதார்நாத் உள்படப் பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார்.

'வேட்டைன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபகத் பாசில், ராணா டகுபதி ஆகியோரும் படம் முழுக்க நடித்துள்ளனர். மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்‌ஷன் உள்படப் பலரும் நடித்துள்ளார்கள்.

வேட்டையனாக மாறிய ரஜினி:

’’வேட்டையன்’’ படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார்கள்.

அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இந்தப்படத்தில் இணைந்து இருக்கின்றனர்.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங்கினை மேற்கொண்டார்.

வேட்டையன் ரிலீஸ் தேதி:

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றபோது, ஆன்மிகத் துறவியிடம் ரஜினிகாந்த் உரையாடல் நடத்தும் வீடியோ வெளியானது. அதில் ’வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரஜினிகாந்த் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.

அதன்படி,படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அவர் துறவியிடம் தெரிவித்தார். அதையே தான் படக்குழு தற்போது உறுதிசெய்திருக்கிறது. அக்டோபர் 12ஆம் தேதி தசரா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இரண்டு நாள்கள் முன்னரே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடல்:

இந்நிலையில் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ. 65 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூ.90 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் ‘வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘மனசிலாயோ’ என்னும் பாடல், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகி செம ஹிட்டானது. குறிப்பாக, இப்பாடலில் தமிழும் மலையாளமும் கலந்து வந்துள்ளதால் ஓணத்தைக் கொண்டாடிய மலையாளிகள், இப்பாடல் வரிகளை எடுத்து ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர்.

வேட்டையன் இசை வெளியீட்டு விழா:

இந்நிலையில் வேட்டையன் படத்தைத் தயாரித்த லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், வரும் செப்டம்பர் 20ஆம் தேதி, சென்னையில் உள்ள நேரு அரங்கில் படத்தின் பாடல் மற்றும் பிரிவியூ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதனால், ரஜினியின் பேச்சைக் கேட்க, அவரது ரசிகர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

வேட்டையன் படக்குழு வெளியிட்ட நடிகர்களின் கதாபாத்திரப்பெயர்கள்:

வேட்டையன் படத்தின் படக்குழு, அதில் நடித்திருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது. அதன்படி, நடிகை ரித்திகா சிங்கின் கதாபாத்திரத்தின் பெயர் ரூபா என்றும், நடிகை துஷாராவின் கதாபாத்திரத்தின் பெயர் சரண்யா என்றும், மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தின் பெயர் தாரா என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனைத்தொடர்ந்து இன்று ராணா டகுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் நட்ராஜ் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது மாமன்னன் படப்புகழ் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரத்தின் பெயர் பேட்ரிக் என்று அதிகாரப்பூர்வமாக வேட்டையன் படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. இதனால் ஃபகத் ஃபாசிலின் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமும், பிக் பி என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை, சத்யதேவ் என வேட்டையன் படக்குழு வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பால், அமிதாப் பச்சனின் ரசிகர்கள் மட்டுமல்லாது, அஜித்தின் ரசிகர்களும் ஆரவாரம் ஆகியுள்ளனர். ஏனெனில், என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித் குமாரின் பெயரும் சத்யதேவ் என்பது தான், அந்த மகிழ்ச்சிக்குப் பின் இருக்கும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹண்ட்டர் வந்துட்டார் என்னும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.