தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kanguva Movie Uthiran Character Release Major Update

Kanguva: ‘கங்குவா தெரியும்.. அதில் உதிரன் தெரியுமா?’ - வருகிறது முக்கிய அப்டேட்!

Marimuthu M HT Tamil
Jan 26, 2024 03:52 PM IST

கங்குவா படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Kanguva: ‘கங்குவா தெரியும்.. அதில் உதிரன் தெரியுமா?’ - வருகிறது முக்கிய அப்டேட்!
Kanguva: ‘கங்குவா தெரியும்.. அதில் உதிரன் தெரியுமா?’ - வருகிறது முக்கிய அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இது தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். கங்குவா திரைப்படத்தின் டைட்டிலை, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. படத்தின் ஷூட்டிங் கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜூ தீவுகள், கேரளா, கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 23ஆம் தேதி இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது.

கங்குவா திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக படம் குறித்து பேசிய சிறுத்தை சிவா, “ உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவான் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசினார்.

இந்நிலையில் கங்குவா படத்தில் ‘உதிரன்’கதாபாத்திரம் குறித்த முக்கிய அறிவிப்பு ஜனவரி 27ஆம் தேதியான நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ள, படத்தைத் தயாரிக்கும் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.