அடுத்த பேரிடி.. புஷ்பா 2 நெரிசலில் சிக்கிய சிறுவன் கவலைக்கிடம்.. மூளைச்சாவு அடைந்ததாக தகவல்.. என்ன செய்ய போகிறார் அல்லு!
புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை நொடிக்கு நொடி மோசம் அடைந்த வருகிறது. ஏற்கனவே சிறுவனின் தாய் ரேவதி உயிரிழந்த நிலையில்.. சிறுவன் தேஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேஜ் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி, அல்லு அர்ஜுன் தனது புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சிகளைக் காணவந்த ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக சந்தியா தியேட்டருக்கு விசிட் வந்தார். அப்போது அவரைக் காண அவரது ரசிகர்கள் முந்தி அடித்துக் கொண்டு சென்றதால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்து நெரிசல் ஏற்பட்டு நிலமை கை மீறி சென்றது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது
இது ஒரு பெண்ணின் மரணத்திற்கும் அவரது மகனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதற்கும் வழிவகுத்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜூனை கைது செய்து பின் ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
