நடிப்பில் பின்னி பெடல் எடுத்த விஜயகாந்த்.. 150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி.. 33 ஆம் ஆண்டில் மாநகர காவல்!
33 Years Of Maanagara Kaaval : 150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி கண்ட இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது. இதில் என்ன ஒரு சோகம் என்றால் தற்போது இப்படத்தின் நாயகன் விஜயகாந்த், இயக்குனர் தியாகராஜன் இருவரும் இல்லை என்பதே.

நடிப்பில் பின்னி பெடல் எடுத்த விஜயகாந்த்.. 150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி.. 33 ஆம் ஆண்டில் மாநகர காவல்!
மாநகர காவல் திரைப்படம் விஜயகாந்தின் சினிமா பயணத்திற்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்று சொல்லலாம். இதில் விஜயகாந்த் இந்தியப் பிரதமரைப் படுகொலையிலிருந்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தில் ஆனந்த்ராஜ், சுமா, நாசர், லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
விஜய்காந்தின் சினிமா கேரியரில் ஹிட்டடித்த படங்களில் முக்கியமான திரைப்படம் ‘மாநகர காவல்’. 1991ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி வெளியான இந்தத்திரைப்படத்தை இயக்குநர் தியாகராஜன் இயக்கி இருந்தார்.
காவல்துறை அதிகாரியாக விஜய்காந்த்
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் இந்தப்படத்தை தயாரித்திருந்தது. காவல்துறை அதிகாரியாக விஜய்காந்த் நடித்திருந்த இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுமா நடித்திருந்தார்.