14 Years of Angadi Theru : உழைக்கும் மக்களின் உண்மை பக்கத்தை உடைத்து கூறிய அங்காடித் தெரு! 15ம் ஆண்டை நெருங்குகிறது!
14 Years of Angadi Theru : அங்காடித் தெரு, தமிழகத்தின் தென் பகுதியில் அல்லது ஏதேனும் ஊர்களில் இருந்து, சென்னைக்கு வேலைக்கு அழைத்துவரப்படும் பதின் பருவ ஏழை பிள்ளைகளின் வலிகளை எடுத்துக்கூறியது.
அங்காடித் தெரு, தமிழ் சினிமா ஒரே நேர்க்கோட்டில் சென்று கொண்டிருக்கும். அவ்வப்போது விலகி ஒரு சில தரமான படங்கள் வரும். அங்காடித் தெரு அதுபோன்ற ஒரு படம். ஆனால் இந்த படம் வெளியான காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சி காலம் என்றே கூறலாம். தொடர் நல்ல படங்கள் வந்துகொண்டிருந்தது.
கமர்ஷியல் படங்கள் மற்றும் ஆர்ட் படங்கள் என வணிகம் மற்றும் கலை என தமிழ் சினிமா ஒரு காலத்தில் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தை கடந்து ரியாலிட்டிகளை பேசும் தமிழ் சினிமாக்கள் வரத்துவங்கின.
அதை கலை படங்களாக தனித்து வைத்துவிடாமல் மக்கள் அவற்றை கொண்டாடி அவற்றிற்கும் வணிக மதிப்பு வழங்கினார்கள். தொடர்ந்து, கலை படங்கள் மட்டுமின்றி கமர்ஷியலாகவும், அவை ஹிட் அடித்து தமிழ் சினிமாவும் வேறு ஒரு டிராக் அமைத்துக்கொடுத்தன.
அங்காடித் தெரு, தமிழகத்தின் தென் பகுதியில் அல்லது ஏதேனும் ஊர்களில் இருந்து, சென்னைக்கு வேலைக்கு அழைத்துவரப்படும் பதின் பருவ ஏழை பிள்ளைகளின் வலிகளை எடுத்துக்கூறியது.
இதுபோல், வறுமை மற்றும் ஏழ்மை சூழலால் ஒரு ஊரில் இருந்து வணிக நகரங்களுக்கு இதுபோல் நன்றாக படித்தாலும், படிக்க வழியின்றி ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் அழைத்து வரப்படுகிறார்கள். ஆண் குழந்தைகள் என்றால், அடியோடும், அதிக வேலைகளோடும் அவர்கள் செய்யும் தவறுகளுக்கான தண்டனைகள் கொடுக்கப்படும். ஆனால், பெண் குழந்தைகள் என்றால் அவர்களுக்கு பாலியல் சீண்டல்கள் முதல் கருக்கலைப்பு வரை, எய்ட்ஸ் என தொடரும் துன்பங்கள் தமிழகத்தில் நடப்பவைதான்.
அதுபோன்ற ஒரு கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அங்காடித்தெரு. அந்த நகரின் பிரபலமான கடையில் ஜோதிலிங்ககும், கனியும் வேலை செய்வார். இருவருக்கும் எப்போதும் சண்டை வந்துகொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க துவங்கிவிடுவார்கள்.
இதற்கிடையில் அவர்களுடன் பணிபுரியும் ஒரு காதல் ஜோடியின் காதல் கடையின் மேலாளருக்கு தெரியவர, அந்தப்பெண் தற்கொலை செய்துகொள்வாள். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு நாள் பூட்டப்பட்ட கடையில் தனியாக மாட்டிக்கொள்வார்கள். அப்போது இவர்கள் கடையில் உள்ள உடைகளை எடுத்து உடுத்திக்கொண்டு ஆடி மகிழ்வார்கள்.
அந்த காட்சிகள் அனைத்தும் சிசி கேமராக்களில் படம்பிடிக்கப்பட்டு, அடுத்த நாள் முதலாளியிடம் மாட்டிக்கொள்வார்கள். இவர்களின் வேலை பறிபோக, வேறு வழியின்றி ப்ளாட்ஃபார்த்தில் உறங்கும்போது அடிபட்டு, கனி காலை இழந்துவிடுவார். அவர்கள் போராடி எப்படி முன்னேறுகிறார்கள் என்பதுதான் கதை.
சண்டை போட்டுக்கொண்டிருக்கும் கனியும், லிங்குவும் எப்போது காதலிக்க துவங்குவார்கள். கனியின் தங்கை வேலை செய்யும் வீட்டில் அவள் பூப்படைந்ததும், அவரை நாய் இருக்கும் அறையில் வைத்திருப்பது, அவர்கள் தங்கும் விடுதியின் நிலை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அவர்களுக்கு கொடுக்கும் வேலைகள், காதல் செய்து மாட்டிக்கொண்டதால் தற்கொலை செய்துகொள்ளும் பெண்ணின் மறைக்கப்படும் மரணம், எல்லாவற்றிற்கும் காரணமான அவர்களின் ஏழ்மை என படம் முமுவதுமே அழவைக்கும் காட்சிகள்.
அதற்கு மத்தியில் அவர்களின் சிறிய சந்தோசங்கள், போராட்டங்கள் என வாழ்வின் உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கும். படத்தில் அஞ்சலி பெண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மகேஷ் என்ற புதிய நடிகரும் ஆண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் இசையமைத்திருப்பார்கள். அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கதைகளை பேசும், அவள் அப்படி ஒன்றும் ஆகிய பாடல்கள் ஹிட். இது ஆஸ்கருப்ழு பரிந்துரைக்கப்பட்ட படம். இந்தப்படம் தெலுங்கில் ஷாப்பிங் மால் என்ற பெயரில் வெளியானது.
டாபிக்ஸ்