THE GOAT BOX OFFICE: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி - தி கோட் படத்தின் 11 நாள் வசூல் நிலவரம் தெரியுமா?
THE GOAT BOX OFFICE: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி - தி கோட் படத்தின் 11 நாள் வசூல் நிலவரம் தெரியுமா?

THE GOAT BOX OFFICE: விஜய் நடித்து செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் பெரும் ஆரவாரத்திற்கும் கொண்டாட்டங்களுக்கும் மத்தியில் வெளியான திரைப்படம், தி கோட். இப்படம், இந்தியாவில் ரூ.212.50 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார்.
தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.