ADMK Vs BJP: ’கோவையில் எங்களுக்கு போட்டி திமுகதான்! பாஜகவுக்கு ஒட்டே இல்லை!’ அண்ணாமலையை விசாளசிய வேலுமணி!
“பாஜக பயங்கரமாக வளர்ந்துவிட்டது என்றாலும் 10 சதவீதம் ஓட்டு வாங்கினாலும் ஜெயித்துவிட முடியுமா?”

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை களம் சூடு பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
கோயம்புத்தூரில், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக சிங்கை ஜி. ராமச்சந்திரன் பி.இ., எம்.பி.ஏ நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.