Tamilisai Soundararajan: மீண்டும் தமிழக பாஜகவில் அண்ணாமலை முன்னிலையில் இணைந்த தமிழிசை.. தென் சென்னையில் போட்டியா?
TN BJP: 400 பாராளுமன்ற உறுப்பினர்களை மரியாதைக்குரிய பாரத பிரதமரிடம் சமர்ப்பிப்பதற்காக நான் இங்கு இணைந்து இருக்கிறேன் என்று அண்ணாமலை சொன்னார். நான் சொல்வது என்னவென்றால் 400 பாராளுமன்ற உறுப்பினர்களோடு நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இணைந்து இருக்கிறேன் என்றார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தராஜன் இன்று சென்னை கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்து கொண்டார்.
பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை சவுந்தர ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "உண்மையிலேயே இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். மரியாதைக்குரிய மாநில தலைவர் தம்பி அண்ணாமலை பேசும்போது நான் கஷ்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார். ஆனால் உண்மையிலேயே கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்திருக்கிறேன். மேலும் 400 பாராளுமன்ற உறுப்பினர்களை மரியாதைக்குரிய பாரத பிரதமரிடம் சமர்ப்பிப்பதற்காக நான் இங்கு இணைந்து இருக்கிறேன் என்று அண்ணாமலை சொன்னார். நான் சொல்வது என்னவென்றால் 400 பாராளுமன்ற உறுப்பினர்களோடு நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இணைந்து இருக்கிறேன் என்றார்.
கமலாலயத்தில் தான் எனது உணர்வு முழுவதுமாக இருந்து கொண்டிருக்கிறது. முற்றிலுமாக இரண்டு ராஜ பவனங்கள் அங்கே பல வசதிகள், பல பணியாட்கள், பல பணிகள், எவ்வளவு இருந்தாலும் அந்த ராஜ பவனங்களை விட்டுவிட்டு மக்கள் பவனமான எனது கமலாலயத்தில் நுழைந்த நிலையில் நான் இன்று மிகவும் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
எப்படி ஆண்டவரும், ஆண்டு கொண்டிருப்பவரும் எனக்கு அனுமதி தரவேண்டும் என்று சொன்னேனோ. அதேபோல் ஆண்டவர் என்னை ஆசீர்வதித்தார். ஆண்டு கொண்டு இருப்பவர் எனக்கு அனுமதி கொடுத்தார். அதனால் இந்த கமலாலயத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று சொல்கிறேன். இங்கே தம்பி அண்ணாமலை உள்ளிட்டோரின் கரங்களை ஒரு சாமானிய தொண்டராக இருப்போன்.
முதன் முதலில் பாரத பிரதமர் வரும் போது 7 ஆண்டுகளுக்கு முன்னால் மாநாட்டில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று நான் மிக வேகமாக சொன்னேன். தற்போது வேண்டும் மோடி மீண்டும் மீண்டும் மீண்டும் மோடி என்ற வாசகத்தோடு உணர்வுப் பூர்வமாக உள்ளப்பூர்வமாக இணைந்திருக்கிறேன்.
ஒரு சதவிகிதம் கூட அவ்வளவு பெரிய பதவியை விட்டுவிட்டு வந்தேன் என்று எனக்கு தோன்றவில்லை ஏனென்றால் அந்த பதவியை விட பாரதிய ஜனதா கட்சியின் சாமானிய உறுப்பினர் என்ற பதவியை தான் நான் மிகப்பெரிய பதவியாக கருதுகிறேன். அதனால் தம்பி அண்ணாமலை முருகன் உள்ளிட்டோரோடு இணைந்து நான் கடுமையான உழைப்பு பாஜக காத்திருக்கிறேன் என்றார்.
இந்நிலையில் தமிழிசை சவுந்தர ராஜன் வரும் மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழச்சி தங்கபாண்டியன் 50.2 சதவிகித வாக்குகளை பெற்று தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ போல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் போட்டியிட உள்ளார். திமுக அதிமுக நேரடியாக மோதும் தொகுதியாக தென் சென்னை இருந்து வரும் நிலையில் தற்போது பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை சவுந்தர ராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தென் சென்னை தொகுதி பெரும் எதிர்பார்ப்பு வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது.