Smriti Irani Vs Rahul Gandhi: ’அமேதிக்கு பதில் ரேபரேலி! ராகுல் காந்தி தோல்வியை ஒப்புக்கொண்டார்’ ஸ்மிருதி இராணி காட்டம்!
“ரேபரேலி தொகுதியில் 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்தார்”

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி (PTI)
நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடாமல் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் ராகுல் காந்தி தோல்வியை ஒப்புக் கொண்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, செல்வாக்கு மிக்க காந்தி குடும்பத்தைச் சேர்ந்த வேட்பாளர் இல்லாமல் அமேதியில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த இத்தொகுதியில் களமிறங்கு வேட்பாளராக கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் கட்சி இன்று காலை அறிவித்தது.
ரேபரேலி தொகுதியில் 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்தார்.