தமிழ் செய்திகள்  /  Elections  /  Proposed List Of Constituencies Dmk And Its Allies Will Contest In 2024 Lok Sabha Elections Full List

DMK Alliance: திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்.. உத்தேச பட்டியலில் நிறைய தொகுதிகள் மாற்றம்.. முழு விபரம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Mar 11, 2024 11:54 AM IST

திமுக கூட்டணியில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து இந்த முறை மாற்றம் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கருதப்படும் உத்தேச தொகுதி பட்டியல்
மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கருதப்படும் உத்தேச தொகுதி பட்டியல்

ட்ரெண்டிங் செய்திகள்

எண்தொகுதி
1வடசென்னை
2மத்திய சென்னை
3தென் சென்னை
4ஸ்ரீபெரும்புதூர்
5நீலகிரி
6தூத்துக்குடி
7தஞ்சாவூர்
8ஈரோடு
9திருவண்ணாமலை
10சேலம்
11தர்மபுரி
12திருநெல்வேலி
13பொள்ளாச்சி
14அரக்கோணம்
15பெரம்பலூர்
16திண்டுக்கல்

காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்ட சில தொகுதிகளை இழக்கிறது. அதற்கு பதிலாக வேறு சில தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன் படி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக கூறப்படும் உத்தேச தொகுதிகள் பட்டியல் இதோ:

எண்தொகுதிகள்
1கன்னியாகுமரி
2சிவகங்கை
3கிருஷ்ணகிரி
4விருதுநகர்
5ஆரணி
6தென்காசி
7தேனி
8கோவை
9மயிலாடுதுறை

கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை மதுரை மற்றும் கடலூர் தொகுதிகள் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் சு.வெங்கடேசன் போட்டியிடும் நிலையில், கடலூரில் அக்கட்சியில் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகள் வழங்க வாய்ப்பு என கூறப்படுகிறது. 

எண்தொகுதி
1மதுரை
2கடலூர்

எண்தொகுதி
1நாகை
2திருப்பூர்

மதிமுகவுக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்ட திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. மதிமுக சார்பில் வைகோ மகன் துரை வையாபுரி போட்டியிட வாய்ப்பு.

எண்தொகுதி
1திருச்சி

இந்த பட்டியல் அனைத்தும் உத்தேச பட்டியல் மட்டுமே. இவை கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது. மேலும், தொகுதி பங்கீடுகள் எப்போதும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel