BJP Bala Ganapathy: சசிகலா புஷ்பாவை சீண்டியவருக்கு பாஜகவில் எம்.பி சீட்! வெடித்தது சர்ச்சை! மாற்றப்படுவாரா வேட்பாளர்?
”சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தபோது, அவரது அருகில் இருந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன். பால கணபதி கூட்ட நெரிசலில் சசிகலா புஷ்பாவை சீண்டுவதாக கூறி வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகின”

பாஜக நிர்வாகியாக உள்ள முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாலகணபதிக்கு வேட்பாளராக சீட் கொடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியியில் உள்ள 40 தொகுதிகளில் 24 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 15 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 22) வெளியானது. இதில், விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.
