தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Shanmuga Pandian: விருதுநகரில் அண்ணனுக்காக பிரச்சாரம்! ’சண்முக பாண்டியன் மீது வழக்குப்பதிவு!’

Shanmuga Pandian: விருதுநகரில் அண்ணனுக்காக பிரச்சாரம்! ’சண்முக பாண்டியன் மீது வழக்குப்பதிவு!’

Kathiravan V HT Tamil
Apr 18, 2024 02:48 PM IST

”சண்முக பாண்டியன் மற்றும் நடிகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு”

சண்முக பாண்டியன்
சண்முக பாண்டியன்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (நாளை) ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

செலிபிரெட்டி தொகுதியான விருதுநகர்!

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி செலிபிரெட்டி தொகுதியாக மாறி உள்ளது. திமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக உள்ள மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் கேப்டன் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.

பாஜக சார்பில் நடிகை ராதிகா வேட்பாளராக களம் இறங்கி உள்ளதால் செலிபிரிட்டி தொகுதியாக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி மாறி உள்ளது.

தேர்தல் பரப்புரை

தமிழ்நாட்டில் நேற்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. இந்த நிலையில் விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக உரிய அனுமதியின்றி தெப்பக்குளம் அருகில் பிரச்சாரம் செய்த சண்முக பாண்டியன் மற்றும் நடிகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

WhatsApp channel