IPL 2022: கடைசி ஓவர் த்ரில்! 2 ரன்களில் ப்ளேஆப் வாய்ப்பை கோட்டைவிட்ட கேகேஆர்-ipl 2022 lucknow pulls off 2 run win to eliminate kolkata - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2022: கடைசி ஓவர் த்ரில்! 2 ரன்களில் ப்ளேஆப் வாய்ப்பை கோட்டைவிட்ட கேகேஆர்

IPL 2022: கடைசி ஓவர் த்ரில்! 2 ரன்களில் ப்ளேஆப் வாய்ப்பை கோட்டைவிட்ட கேகேஆர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 19, 2022 01:05 AM IST

கடைசி ஓவரில் தேவைப்பட்ட 21 ரன்களில் 18 ரன்களை முதல் 4 பந்துகளில் அடித்த வெற்றி அருகே சென்று அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 2 ரன்களில் தோல்வியை தழுவியது மட்டுமல்லாமல் ப்ளேஆப் வாய்ப்பையும் நழுவவிட்டுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

<p>அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி லக்நெளவுக்கு த்ரில் வெற்றியை பெற்று தந்த ஸ்டொய்னிஸ்</p>
<p>அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி லக்நெளவுக்கு த்ரில் வெற்றியை பெற்று தந்த ஸ்டொய்னிஸ்</p> (PTI)

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் அனுபவம் பொருந்திய ரஹானா காயம் காரணமாக விலகியது என சோதனைகளால் சூழப்பட்டது கொல்கத்தா அணி. ஆரம்பத்திலேயே நெருக்கடியுடன் களமிறங்கிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் வெங்கடேஷ் ஐயர், அபிஜித் தோமர் ஆகியோர் அதை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

இரண்டு இலக்க ரன்கள் வருவதற்குள்ளாகவே முதல் 2 பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. இதன் பின்னர் கொல்கத்தா அணியின் செல்லப்பிள்ளை நிதிஷ் ராணா - கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பார்னர்ஷிப் அமைத்தது மட்டுமல்லாமல் அதிகமான ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்து விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

பந்த நான்கு புறமும் பவுண்டரிகளாக விரட்டிய ராணா 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர் சென்ற ரன் குவிப்பு பணியை சாம் பில்லிங்ஸ் தொடர்ந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன் பங்குக்கு பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசினார். 29 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் ஸ்டொய்னிஸ் வெளியேற்றினார். இவரைத் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்த பில்லிங்ஸும் 36 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் ஏராளமான முறை கொல்கத்தா அணியை காப்பாற்றிய ஆண்ட்ரு ரசல் தனது ஸ்டைல் அதிரடியால் அணியை கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி ஏமாற்றினார். ஆனால் ரசலுக்கு பின்பு களம் காண வந்த இளம் வீரர் ரிங்கு சிங், மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தேவைப்படும் ரன்ரேட்க்கு ஏற்ப ஒரு ஓவருக்கு தேவைப்படும் சிக்ஸர்கள் அல்லது பவுண்டரிகளை விரட்டி வந்தார். இவருடன் இணைந்து சுனில் நரேனும் 3 சிக்ஸர்களை பறக்க விட்டார். இருப்பினும் தேவைப்படும் ரன் ரேட் அதிகமாகவே இருந்தது.

கடைசி இரண்டு ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்டபோது, ஆட்டத்தின் 19வது ஓவரில் 17 ரன்கள் அடிக்கப்பட்டது. இதையடுத்து இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் நான்கு பந்துகளில் பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள், 2 ரன்கள் என மொத்தம் 18 ரன்களை எடுத்தார் ரிங்கு சிங். எஞ்சியிருந்து 2 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவை என்று இருந்த நிலையில் எவின் லீவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச் மூலம் அதிரடியால் மிரட்டி வந்த ரிங்கு சிங் பெவிலியன் திரும்பினார்.

பின்னர் புதிய பேட்ஸ்மேன் ஸ்டிரைக் எடுக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி உமேஷ் யாதவ் பேட் செய்ய வந்தார். ஒரு பந்தில் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி, இரண்டு ரன்கள் எடுத்தால் டிரா என்று ஆட்டம் பரபரப்பின் உச்சகட்டத்தில் இருந்தபோது, களீன் யார்க்கர் பந்து வீசி உமேஷ் விக்கெட்டை கைபற்றினார் ஸ்டொய்னிஸ்.

இதனால் லக்நெள அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. லக்நெள பெளலர்கள் மோக்ஸின் கான் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் 2 ஓவர்களுக்கு 23 ரன்கள் என வாரி வழங்கியபோது 3 விக்கெட் வீழ்த்தினார் ஸ்டொய்னிஸ். கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்கள் விட்டுக்கொடுத்த இவர் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அணியின் ஸ்டிரைக் பெளலரான ஆவேஷ் கான் 60 ரன்கள் கொடுத்த பயங்கர அடி வாங்கினார்.

ஆட்ட நாயகன் சந்தேகமே இல்லாமல் பீஸ்ட் மோடில் விளையாடிய டி காக் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் பெற்ற தோல்வியால் ப்ளேஆப் வாய்ப்பு இழந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்தப் போட்டியின் மூலம் லக்நெள மற்றும் கொலக்த்தா அணி அனைத்து போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.