England Won: தூள் கிளப்பிய சால்ட்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து வெற்றி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  England Won: தூள் கிளப்பிய சால்ட்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

England Won: தூள் கிளப்பிய சால்ட்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

Manigandan K T HT Tamil
Jun 20, 2024 10:16 AM IST

T20 WC: விக்கெட் கீப்பர் பூரன், கேப்டன் போவெல் ஆகியோர் தலா 36 ரன்களை எடுத்தனர். இவ்வாறாக 20 ஓவர்களில் 180 ரன்களை எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.

England Won: தூள் கிளப்பிய சால்ட்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து வெற்றி AP/PTI
England Won: தூள் கிளப்பிய சால்ட்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து வெற்றி AP/PTI (PTI)

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஒரு இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த மைதானத்தில் இரு அணிகளும் மோதுவது வாணவேடிக்கைகளை முன்னறிவிக்கும் வகையில் அமைந்தது. 

இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் விளையாடி 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை குவித்தது.

பிலிப் சால்ட் அதிரடி

பிராண்டன் கிங் 23 ரன்களையும் ஜே.சார்லஸ் 38 ரன்களையும் எடுத்தனர்.

விக்கெட் கீப்பர் பூரன், கேப்டன் போவெல் ஆகியோர் தலா 36 ரன்களை எடுத்தனர். இவ்வாறாக 20 ஓவர்களில் 180 ரன்களை எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.

இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது. அந்த அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி கண்டது.

பிலிப் சால்ட் 87 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 5 சிக்ஸர்கள், 7 ஃபோர்ஸ் விளாசினார். 47 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்தினார்.

கேப்டன் பட்லர் 25 ரன்கள் எடுத்திருந்தபோது எல்பிடபிள்யூ ஆனார்.

மொயீன் அலி 13 ரன்களில் நடையைக் கட்ட அடுத்து பேர்ஸ்டோ வந்தார்.

அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் குவித்தார்.

சூப்பர் 8 சுற்றில் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து வெற்றியுடன் தொடங்கியுள்ளது. மறுபுறம் தென்னாப்பிரிக்காவும் சூப்பர் 8 தொடக்க மேட்ச்சில் வெற்றி கண்டது.

தென்னாப்பிரிக்கா வெற்றி

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளன. தொடர்ந்து 41வது போட்டியாகவும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியாகவும் குரூப் 2 பிரிவில் தென் ஆப்பரிக்கா - யுஎஸ்ஏ அணிகளுக்கு இடையே நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுஎஸ்ஏ கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா 20 ஓவரில் 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஓபனராக களமிறங்கிய குவன்டைன் டி காக் 74, ஐடன் மார்க்ரம் 46, ஹென்ரிச் கிளாசன் 36, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்கள் அடித்தனர்.

யுஎஸ்ஏ பவுலர்களில் செளரப் நேட்ரவால்கர், ஹர்மீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

மிகப் பெரிய இலக்காக இருந்தாலும் சிறப்பாக சேஸிங் செய்த யுஎஸ்ஏ அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஓபனர் ஆண்ட்ரிஸ் கௌஸ் 80 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக ஹர்மீத் சிங் 38, ஸ்டீவன் டெய்லர் 24 ரன்கள் எடுத்தனர்.

தென் ஆப்பரிக்கா பவுலர்களில் அற்புதமாக பவுலிங் செய்த ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேசவ் மகராஜ், அன்ரிஜ் நார்ட்ஜே, தபரிஸ் ஷாம்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.