WI vs PNG Result: குரூப் சி பிரிவில் தனது முதல் மேட்ச்சில் வெற்றியுடன் தொடங்கியது முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ்
T20 cricket worldcup: சேஸிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 19 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்தது. பிராண்டன் கிங், 34 ரன்கலும், ராஸ்டன் சேஸ் 42 ரன்களும் எடுத்தனர். குரூப் சி பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்தது.
West Indies: ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பை 2024 2வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது. 137 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 19 ஓவர்களில் 137/5 ரன்களை எட்டியது, ரோஸ்டன் சேஸ் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நேற்றிரவு வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய பப்புவா நியூ கினியா 136 ரன்களை 8 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக செஸே பவ் அரை சதம் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், ஷெப்ஹெர்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சுருட்டினர்.
சேஸிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 19 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்தது. பிராண்டன் கிங், 34 ரன்கலும், ராஸ்டன் சேஸ் 42 ரன்களும் எடுத்தனர். குரூப் சி பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்தது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
"டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஜூன் 2 ஆம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. இந்த முறை டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகிறது, பெரும்பாலான போட்டிகள் காலை 6 மணி அல்லது இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் ஐந்து அணிகள் உள்ளன.
குரூப் A - இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா
குரூப் B - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
குரூப் C - நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, உகாண்டா
குரூப் D - தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம்
ஒவ்வொரு குரூப்பிலும்
ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடுகிறது. அதாவது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி அதிகபட்சமாக 8 புள்ளிகளைப் பெறும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் 8 நிலைக்குச் செல்லும். சூப்பர் 8 இல் இரண்டு குழுக்கள் போட்டியிடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.
டி20 உலகக் கோப்பை 2024 நடைபெறும் இடங்கள்: டி20 உலகக் கோப்பை 2024 மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள 9 மைதானங்களிலும் நடைபெறுகிறது. அதில் ஆறு மைதானங்கள் வெஸ்ட் இண்டீஸிலும், மூன்று மைதானங்கள் அமெரிக்காவிலும் உள்ளன. மேற்கிந்திய தீவுகளில், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், கென்சிங்டன் ஓவல், பிராவிடன்ஸ் ஸ்டேடியம், டேரன் சமி கிரிக்கெட் மைதானம், அர்னோஸ் வேல் ஸ்டேடியம் மற்றும் பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.
அமெரிக்காவில், சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க், நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அட்டவணை பின்வருமாறு: இந்த மெகா போட்டியின் குரூப் ஏ பிரிவின் ஒரு பகுதியாக லீக் கட்டத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மற்றும் இந்திய நேரப்படி போட்டிகள் நடைபெறும் நேரங்கள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியா vs அயர்லாந்து - ஜூன் 5 இரவு 8 மணிக்கு (நியூயார்க்)
இந்தியா vs பாகிஸ்தான் - ஜூன் 9 இரவு 8 மணிக்கு (நியூயார்க்)
இந்தியா vs அமெரிக்கா - ஜூன் 12 இரவு 8 மணிக்கு (நியூயார்க்)
இந்தியா vs கனடா - ஜூன் 15 இரவு 8 மணிக்கு (ஃப்ளோரிடா)"
டாபிக்ஸ்