முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை..கடைசி 5 ஓவரில் தென் ஆப்பரிக்கா தரமான கம்பேக் - பினிஷிங்கில் சொதப்பிய இந்தியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை..கடைசி 5 ஓவரில் தென் ஆப்பரிக்கா தரமான கம்பேக் - பினிஷிங்கில் சொதப்பிய இந்தியா

முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை..கடைசி 5 ஓவரில் தென் ஆப்பரிக்கா தரமான கம்பேக் - பினிஷிங்கில் சொதப்பிய இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 08, 2024 10:30 PM IST

டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்து முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை புரிந்துள்ளார். இந்தியா பினிஷிங்கில் சொதப்பிய நிலையில் பெரிய ஸ்கோர் குவிக்க தவறியது.

முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை..கடைசி 5 ஓவரில் தென் ஆப்பரிக்கா தரமான கம்பேக் - பினிஷிங்கில் சொதப்பிய இந்தியா
முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை..கடைசி 5 ஓவரில் தென் ஆப்பரிக்கா தரமான கம்பேக் - பினிஷிங்கில் சொதப்பிய இந்தியா (AP)

தென் ஆப்பரிக்கா பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பரிக்கா அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்துள்ளது. இந்திய பேட்டர்களில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 107, திலக் வர்மா 33, சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் எடுத்தனர்.

தென்ஆப்பரிக்கா அணியில் 7 பேர் பவுலிங் செய்த நிலையில், அனைவரின் ஓவர்களிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து துவைத்து ரன்கள் எடுத்தனர். ஜெரால் கோட்ஸி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், பேட்ரிக் க்ரூகர், பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை

இந்திய இன்னிங்ஸில் தொடக்கம் முதலே தென் ஆப்பரிக்கா பவுலர்களின் பந்து வீச்சை நாலாபுறம் பவுண்டரி, சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அதிரடி காட்டி வந்த சஞ்சு சாம்சன். அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு 27 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

அதன் பிறகும் அதிரடியை தொடர்ந்த சாம்சன் 47வது பந்தில் சதமடித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனை புரிந்தார். அத்துடன் உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றார்.

50 பந்தில் 107 ரன்கள் அடித்த சாம்சன் சிக்ஸ் முயற்சியில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 10 சிக்ஸர்களை அடித்து துவம்சம் செய்தார்.

பினிஷிங் சொதப்பல்

சாம்சனில் அதிரடியால் 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது இந்தியா. ஆனால் அவர் அவுட்டான பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 2, ரிங்கு சிங் 11 ரன்கள் என விரைவாக அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இதனால் இந்தியாவுக்கு நல்ல பினிஷிங் அமையாமல் போனது.

கடைசி 5 ஓவரில் விக்கெட்டுகளை இழந்த இந்தியா 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் குவித்தனர்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.