இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேஸ்களில் சாதித்த சஞ்சு சாம்சன்..டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் அடித்து வரலாற்று சாதனை
- India vs Bangladesh 3rd T20I: வங்கதேசம் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் மைல்கல் சாதனையும் நிகழ்த்தியுள்ளார். இந்திய அணியும் டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை புரிந்துள்ளது.
- India vs Bangladesh 3rd T20I: வங்கதேசம் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் மைல்கல் சாதனையும் நிகழ்த்தியுள்ளார். இந்திய அணியும் டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை புரிந்துள்ளது.
(1 / 6)
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் எம்எஸ் தோனி, ரிஷப் பண்ட் ஆகியோரின் வரிசையில் தற்போது சஞ்சு சாம்சனும் அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பீஸ்ட் மோட் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
(2 / 6)
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 297 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் தனது அதிரடியால் வங்கதேச பவுலர்களை மிரட்டிய சாம்சன் 40 பந்தில் சதமடித்தார். அவர் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்களை அடித்துள்ளார்
(3 / 6)
சஞ்சு சாம்சன் சதமடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற மைல்கல் சாதனை புரிந்துள்ளார். தோனி, ரிஷப் பண்ட் போன்ற அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திடாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்
(4 / 6)
அத்துடன் இவரது இந்த சதம் இந்திய வீரரின் அதிவேக இரட்டை சதம் என்கிற மற்றொரு சாதனையும் புரிந்துள்ளது. இந்த லிஸ்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் சதமடித்து முதல் இடத்தில் உள்ளார்
(5 / 6)
இந்த போட்டியில் இந்தியா அடித்திருக்கும் 297 ரன்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற வரலாற்று சாதனையும் புரிந்துள்ளது
(6 / 6)
இந்திய அணி 7.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிவேக சதம் இதுவாகும். அதாவது, இந்தியா இதற்கு முன்பு இவ்வளவு வேகமாக 100 ரன்களைக் கடந்ததில்லை. இதேபோல் அதிவேக 150, 200, 250 ரன்களையும் அடித்துள்ளது. 10 ஓவரில் 152 ரன்களும், 14 ஓவரில் 200 ரன்கள், 16.4 ஓவரில் 250 ரன்கள் அடித்தது. இந்தியா 300 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 ரன்களில் கோட்டைவிட்டது
மற்ற கேலரிக்கள்