WPL Season 2 சாம்பியனான ஸ்மிருதி மந்தனாவின் ஆர்சிபி-சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை வாழ்த்து மழை
WPL Season 2 Champion: ஆர்சிபி மகளிர் அணியின் வெற்றியால் விராட் கோலி மகிழ்ச்சியடைந்தார். முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர். மேலும் பலர் ஆர்சிபி அணிக்கு வாழ்த்து கூறினார்.

ஆடவர் ஆர்சிபி அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் பட்டம் வெல்லவில்லை, ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் திரண்ட உணர்ச்சிகரமான ரசிகர்களுக்கும், வெற்றித் தருணத்தைக் காண வீட்டில் விழித்திருந்தவர்களுக்கும், இது 16 ஆண்டுகால காயம் மற்றும் ஏமாற்றத்தின் முடிவை சரிசெய்தது.
ஆம், ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான அணி WPL 2024 இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஒரு மகளிர் அணியாகவும் ஒட்டுமொத்தமாகவும் தங்கள் முதல் பட்டத்தை வென்றது.
ஷ்ரேயங்கா பாட்டீல் (4/12) மற்றும் சோஃபி மோலினக்ஸ் (3/20) ஆகியோரின் சுழல் கூட்டணி டெல்லி அணியை 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியதும் பாராட்டுக்குரியது. ஷபாலி வர்மா மற்றும் மெக் லானிங் ஆகியோர் தொடக்க கூட்டணியை 64 ரன்கள் எடுத்தனர், ஆனால் மோலினக்ஸின் மூன்று விக்கெட்டுகளால் டெல்லி தனது 10 விக்கெட்டுகளையும் வெறும் 49 ரன்களுக்கு இழந்தது. ஒட்டுமொத்தம் டெல்லி அணி 113 ரன்களில் சுருண்டது. 18.3 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
