தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ipl 2024: இருவரும் செய்த ஒரே தவறு! லக்னோ கேப்டன் கேஎல் ராகுல், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு அபராதம்

IPL 2024: இருவரும் செய்த ஒரே தவறு! லக்னோ கேப்டன் கேஎல் ராகுல், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு அபராதம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 20, 2024 05:34 PM IST

இந்த சீசனில் முதல் முறையாக ஐபிஎல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதற்காக இரு அணி கேப்டன்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இது நிகழ்ந்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு அபராதம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு அபராதம் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக, தோனியின் அதிரடி இன்னிங்ஸ் அமைந்திருந்தது. 9 பந்துகளில் 28 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்த அவர் தனது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை அடித்தார்.

ருதுராஜ், கேஎல் ராகுலுக்கு அபராதம்

இந்த போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் போன காரணத்துக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐபிஎல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "லக்னோ எகானா மைதானத்தில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியில் லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் இருந்துள்ளார். இது ஐபிஎல் நடத்தை விதிமீறல் ஆகும். முதல் முறையாக அவர் இந்த தவறில் ஈடுபடுவதால் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், "லக்னோ எகானா மைதானத்தில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் ஐபிஎல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். முதல் முறையாக அவர் இந்த தவறை செய்திருப்பதால் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என ஐபிஎல் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் மற்றொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குறித்த நேரத்தில் பவுலிங் செய்யாத காரணத்துக்காக டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த லிஸ்டிஸ் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேஎல் ராகுல், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளனர்.

இதில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் இரண்டு முறை ஐபிஎல் நடத்தை விதிமுறை மீறலில் ஈடுபட்டாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் ஒரு முறை அவர் இதை செய்யும்பட்சத்தில் ஒரு போட்டி விளையாட தடை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. 

இதுவரை அபாராதம் பெறாத கேப்டன்களாக சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு கேப்டன் டூ பிளெசிஸ், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point