தமிழ் செய்திகள்  /  Cricket  /  Royal Challengers Bengaluru Defeated Punjab Kings

RCBvsPBKS:பஞ்சாப் கிங்ஸ் அணியை பொளந்த கோலி, தினேஷ் கார்த்திக்: 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அபாரவெற்றி!

Marimuthu M HT Tamil
Mar 25, 2024 11:39 PM IST

RCBvsPBKS: பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக், இறுதியில் சாதுரியமாக விளையாடி விக்கெட் இழப்பின்றி பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினார். (AP Photo/Aijaz Rahi)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக், இறுதியில் சாதுரியமாக விளையாடி விக்கெட் இழப்பின்றி பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினார். (AP Photo/Aijaz Rahi) (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னையில் ஆரம்பித்தது. இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்; பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூருவில் இருக்கும் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதின.

இந்திய நேரப்படி, இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது. அதன்படி, டாஸ் வென்ற பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய சொன்னது.

பின் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக, அணியின் கேப்டன் ஷிகார் தவானும், ஜானி பெயிர்ஸ்டவ்வும் களமிறங்கினர். இதில் நிலைத்து நின்று ஆடிய ஷிகார் தவான், 37 பந்துகளுக்கு 45 ரன்கள் குவித்தார். ஆனால், எதிர்முனையில் களமிறங்கிய ஜானி பெயிர்ஸ்டவ் வெறும் 8 ரன்களில் முகமது சிராஜின் பவுலிங்கில், கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், 17 பந்துகளில் 25 ரன்களை அடித்தபோது, மேக்ஸ்வேல் பந்தில், அனுஜ்ஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின், லைம் லிவிங்ஸ்டன், சாம் கரண், ஜிதேஷ் ஷர்மா ஆகியோரும் முறையே 17 ரன்கள், 23 ரன்கள், 27 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த இணையாக களமிறங்கிய ஷஷாங்க் சிங் 8 பந்துகளில் 21 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழாக்காமல் இருந்தார். ஹர்பீத் பிராரும் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக, பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை எடுத்தது. இதில் 8 ரன்கள் உதிரியாக பஞ்சாப் அணிக்கு கிடைத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில், முகமது சிராஜ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதன்பின், 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கியது.

தொடக்க வீரர்களாக விராத் கோலியும், பெங்களூரு அணியின் கேப்டன் பிளெஸிஸும் களமிறங்கினர். இதில் பிளெஸிஸ் வந்த வேகத்தில் வெறும் 3 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின்வந்த கேமரன் கிரீனும் மூன்று ரன்களிலும் ரபடாவின் பந்தில் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பெங்களூரு அணி தடுமாறுவதை உணர்ந்த விராத் கோலி பொறுமையாக நிலைத்து நின்று ஆடினார். விராத் கோலி, 49 பந்துகளில் 2 சிக்ஸர்கள்,11 பவுண்டரிகளை அடித்தார். இதனால் அவரது ஸ்கோர் 77 ஆக உயர்ந்தது. அப்போது துரதிர்ஷ்டவசமாக, படேல் பந்தில் ஹர்பீத் பிராரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், விராத் கோலி.

அதன்பின், வந்த பெங்களூரு அணியின் வீரர்கள் மெல்ல தடுமாறத் தொடங்கினர். இருப்பினும், ரஜத் படிடர் 18 ரன்கள் எடுத்து பெங்களூரு அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அவருக்கு அடுத்து இறங்கிய, மேக்ஸ்வெல் வெறும் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்து அனுஜ் ராவத் 11 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 

இறுதியாக, தினேஷ் கார்த்திக்கும், மஹிபால் லம்ரூர் ஆகிய இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினர். தினேஷ் கார்த்திக், 10 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸ் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடக்கம். மஹிபல் 8 பந்துகளுக்கு 17 ரன்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூரு அணி, 19.2 ஓவர்கள் முடியும்போது, ஆறு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் அடித்து, இலக்கை விட இரண்டு ரன்கள் அதிகம் பெற்று வெற்றிபெற்றது. இதன்மூலம், பெங்களூரு அணி 4 பந்துகள் எஞ்சியிருக்க, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் ககிசோ ரபடா இரண்டு விக்கெட்டுகளும், ஹர்பீத் பிரார் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

 

IPL_Entry_Point