WPL 2024: ஈ சாலா கப்பை நெருக்கிய ஆர்சிபி! மும்பைக்கு எதிராக த்ரில் வெற்றி - பைனலில் டெல்லிக்கு எதிராக மோதல்
குறைவான ஸ்கோர் எடுத்திருந்தபோதிலும் பவுலிங்கில் மும்பைக்கு நெருக்கடி கொடுத்து த்ரில் வெற்றியை பெற்றுள்ளது ஆர்சிபி. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் எலிமினேட்டரில் நாக் அவுட்டாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி மகளிர் அணியினர் (PTI)
மகளிர் ப்ரீமியர் லீக் எலிமினேட்டர் போட்டி ஆர்சிபி மகளிர் - மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
இந்த சூழ்நிலையில் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை 5 ரன்களில் வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ஆர்சிபி மகளிர் அணி.
ஆர்சிபி பேட்டிங்
இதையடுத்து டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த ஓபனர்களான ஸ்மிருதி மந்தனா, சோபி டெவின் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தராமல் ஏமாற்றினர். இருவரும் தலா 10 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்தடுத்து அவுட்டாக பெவிலியன் திரும்பினர்.
