தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Rcb Cricketer Ellyse Perry Creates History In Womens Premier League Becomes 1st Cricketer To Take 6 Wickets In Wpl

Ellyse Perry: மகளிர் பிரீமியர் லீக்கில் முதல் பவுலராக வரலாறு படைத்த எல்லிஸ் பெர்ரி! ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகள்

Mar 13, 2024 07:15 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 13, 2024 07:15 AM , IST

  • Ellyse Perry: மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் வரலாற்று சாதனையை புரிந்துள்ளார் ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் 6 விக்கெட் வீழ்த்தியிருக்கும் நிலையில் புதிய சாதனையாக அமைந்துள்ளது

மார்ச் 12ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிராக 6 விக்கெட்டை எடுத்த ஆர்சிபி மகளிர் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி, மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்துள்ளார்

(1 / 6)

மார்ச் 12ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிராக 6 விக்கெட்டை எடுத்த ஆர்சிபி மகளிர் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி, மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்துள்ளார்(PTI)

மும்பை இந்தியன்ஸ் பேட்டர்களான சஞ்சீவன் சஞ்சனா, ஹர்மன்ப்ரீத் கெளர், அமெலியா கெர், அமன்ஜோத் கெளர், பூஜா வஸ்த்ராகர்,நாட் ஸ்கிவர் ப்ரண்ட் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார் எல்லிஸ் பெர்ரி. மும்பை மகளிர் அணி 113 ரன்களுக்கு ஆல்அவுட்டானது

(2 / 6)

மும்பை இந்தியன்ஸ் பேட்டர்களான சஞ்சீவன் சஞ்சனா, ஹர்மன்ப்ரீத் கெளர், அமெலியா கெர், அமன்ஜோத் கெளர், பூஜா வஸ்த்ராகர்,நாட் ஸ்கிவர் ப்ரண்ட் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார் எல்லிஸ் பெர்ரி. மும்பை மகளிர் அணி 113 ரன்களுக்கு ஆல்அவுட்டானது(PTI)

நான்கு ஓவர்கள் பந்து வீசிய பெர்ரி வெறும் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் எல்லிஸ் பெர்ரி. 33 வயதாகும் ஆஸ்திரேலியா வீராங்கனையான பெர்ரி, மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில், ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் மேல் கைப்பற்றும் ஐந்தாவது பவுலராக உள்ளார்

(3 / 6)

நான்கு ஓவர்கள் பந்து வீசிய பெர்ரி வெறும் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் எல்லிஸ் பெர்ரி. 33 வயதாகும் ஆஸ்திரேலியா வீராங்கனையான பெர்ரி, மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில், ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் மேல் கைப்பற்றும் ஐந்தாவது பவுலராக உள்ளார்(PTI)

பவுலிங் செய்த முதல் 9 பந்துகளில் விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி, அடுத்த 15 பந்துகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

(4 / 6)

பவுலிங் செய்த முதல் 9 பந்துகளில் விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி, அடுத்த 15 பந்துகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்(PTI)

பவுலிங்கை போல் பேட்டிங்கிலும் கலக்கிய எல்லிஸ் பெர்ரி 40 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல், ஆர்சிபி மகளிர் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்

(5 / 6)

பவுலிங்கை போல் பேட்டிங்கிலும் கலக்கிய எல்லிஸ் பெர்ரி 40 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல், ஆர்சிபி மகளிர் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்(PTI)

மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி மகளிர், ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற்றது

(6 / 6)

மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி மகளிர், ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற்றது(PTI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்