தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pbks Vs Mi Innings Break: சூர்யாவின் சூப்பர் ஆட்டம், திலக் வர்மாவின் அதிரடி - முல்லான்பூரில் அதிக ரன்கள் குவித்த மும்பை

PBKS vs MI Innings Break: சூர்யாவின் சூப்பர் ஆட்டம், திலக் வர்மாவின் அதிரடி - முல்லான்பூரில் அதிக ரன்கள் குவித்த மும்பை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 18, 2024 09:32 PM IST

தனது பாணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அரைசதமடித்தார். திலக் வர்மா கடைசி கட்டத்தில் அதிரடி கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பந்தை பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்டும் சூர்யகுமார் யாதவ்
பந்தை பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்டும் சூர்யகுமார் யாதவ் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

பஞ்சாப் அணியில் காயம் காரணமாக ஷிகர் தவான் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே சாம் கரன் அணியின் கேப்டனாக செயல்படுகிறார். ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக ரிலீஸ் ரோசோவ் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

பஞ்சாப் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78,  ரோகித் ஷர்மா 36, திலக் வர்மா 34 ரன்கள் எடுத்துள்ளனர்.

பஞ்சாப் பவுலர்களில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.

சூர்யகுமார் - ரோகித் பார்ட்னர்ஷிப்

மும்பை அணியின் ஓபனரான இஷான் கிஷன் 8 ரன்னில் அவுட்டானார். இதன் பின்னர் மற்றொரு ஓபனர் ரோகித் ஷர்மாவும், சூர்யகுமார் யாதவும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அதிரடியாக பேட் செய்து ரன்களை குவித்த இவர்கள் 81 ரன்கள் சேர்த்தனர்.

தனது ஸ்டைல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் ஷர்மா 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் தனது இன்னிங்ஸில் 3 சிக்ஸர் 2 பவுண்டரிகளை அடித்தார்.

மறுபுறம் சூர்யகுமார் யாதவ் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 360 டிகிரி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளை அடித்தார்.

சோபிக்காத பாண்ட்யா

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பெரிய அளவில் சோபிக்காமல் இருந்து வரும் பாண்ட்யா 10 ரன்னில் வெளியேறினார். இவரை தொடர்ந்து டிம் டேவிட்டும் 14 ரன்கள் அடித்து அதிரடி காட்ட முயற்சித்து அவுட்டானார். ரோமாரியோ ஷெப்பர்ட் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் கடைசி வரை களத்தில் இருந்த திலக் வர்மா அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர்களை அடித்து ரன்குவித்தார். 18 பந்துகளில் 34 ரன்கள் அடித்த திலக் வர்மா, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்தார்.

சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷல் படேல்

பஞ்சாப் பவுலர்களில் ஹர்ஷல் படேல் மட்டும் சிறப்பாக பவுலிங் செய்தார். 4 ஓவரில் 31 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 7 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் ஒரு ரன் அவுட் செய்யப்பட, கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point