தமிழ் செய்திகள்  /  Cricket  /  Madan Lal Udhouram Sharma Former Indian Cricket Player Birthday Today

HBD Madan Lal: 39 டெஸ்ட் மேட்ச், 67 ODI மேட்ச்.. இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய மதன் லால் பிறந்த நாள்

Manigandan K T HT Tamil
Mar 20, 2024 06:00 AM IST

Madan lal: ஒரு நாள் கிரிக்கெட்டில் 1987ஆம் ஆண்டு மார்ச் 20ம் தேதி இவர் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார் மதன் லால். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 130வது வீரர் ஆவார். ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அதே ஆண்டு ஜூலை 13ம் தேதி அதே இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார்.39

அன்றும் இன்றும் மதன் லால்
அன்றும் இன்றும் மதன் லால்

ட்ரெண்டிங் செய்திகள்

அவரது பிறந்த நாள் இன்று. 1951ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் பிறந்தார். வலது கையில் பந்துவீசவும், பேட்டிங் செய்யவும் திறனும் கொண்டவர். இவர் ஒரு ஆல்-ரவுண்டராக இந்திய கிரிக்கெட் அணியில் செயல்பட்டார்.

கிரிக்கெட் வாழ்க்கை

1974ஆம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமானார் மதன் லால்.

இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 130வது வீரர் ஆவார். ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அதே ஆண்டு ஜூலை 13ம் தேதி அதே இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார்.

இவர் டெஸ்டில் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக 1986ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொருத்தவரை முதலும் கடைசியும் இங்கிலாந்துக்கு எதிராகவே இவருக்கு அமைந்தது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 1987ஆம் ஆண்டு மார்ச் 20ம் தேதி இவர் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளுக்காக உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடியிருக்கிறார்.

தனது கெரியரில் மொத்தம் 39 டெஸ்ட்களில் விளையாடி 5 அரை சதம் உள்பட 1,042 ரன்களை பதிவு செய்துள்ளார் மதன் லால். ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொருத்தவரை 67 ஆட்டங்களில் விளையாடி 1 அரை சதம் உள்பட 401 ரன்களை எடுத்துள்ளார்.

டெஸ்டில் 71 விக்கெட்டுகளையும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். 83 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தது இவரது சாதனை மைல்கல்.

ஓய்வுக்கு பிறகு..

ஓய்வுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். 1996-97 காலகட்டத்தில் இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். 2000-2001 வரை வீரர்கள் தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும், டெல்லி ஜெயன்ட்ஸ் அணியின் கோச்சாகவும் இருந்தார்.

பாலிவுட்டில் 83 என்ற பெயரில் வெளியான படத்தில் இவரது கதாபாத்திரத்தில் ஹர்டி சாந்து நடித்திருந்தார்.

83 உலகக் கோப்பையில் பங்களிப்பு

83 திரைப்படம் உலகக் கோப்பையை இந்தியா எவ்வாறு வென்றது என்பதை காட்சிப்படுத்தியிருந்தது. 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பைனல் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் மதன் லால். வெஸ்ட் இண்டீஸை சேஸிங் செய்ய விடாமல் தடுத்ததில் இவரது பங்களிப்பும் முக்கியமானதாகும். கிரிக்கெட்டில் மதன் லாலின் சாதனைக்காக அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

அரசியல்

மார்ச் 2009 இல், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதன் லாலை வேட்பாளராக நிறுத்த இந்திய தேசிய காங்கிரஸ் முடிவு செய்தது. இமாச்சல பிரதேச பாஜக தலைவர் பிரேம் குமார் துமாலின் மகன் அனுராக் தாக்கூரை எதிர்த்து இடைத்தேர்தலில் போட்டியிட மதன் லால் தேர்வு செய்யப்பட்டார்.

மதன் லாலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பிலும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறோம்.

IPL_Entry_Point