தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Rakul Preet Singh Interview About How Her Dad Grilled Jackky Bhagnani In First Meeting

Rakul Preet Singh: ‘தொண்டையில் சிக்கிய சாப்பாடு’.. கணவராக கைகோர்க்க மிலிட்டரி அப்பா வைத்த முதல் டெஸ்ட்! - ரகுல் பேட்டி!

Mar 12, 2024 05:59 PM IST Kalyani Pandiyan S
Mar 12, 2024 05:59 PM , IST

அப்பாக்கள் அப்பாக்களாத்தானே நடந்து கொள்வார்கள். ஜாக்கியிடம் அவர் நேரடியாக சில விஷயங்களை கேட்டார். ஆனால் ஜாக்கி அதற்கு தயாராக இருந்தார். 

தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று,  தேவ், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.  

(1 / 5)

இதனையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த அவர்கள், கடந்த பிப்ரவரி 21ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் டி.என்.ஏ தளத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் கொடுத்த பேட்டியில், ஜாக்கி தன்னுடைய அப்பாவை முதன்முறையாக சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.  இது குறித்து அவர் பேசும் போது, “  உண்மையில் அன்று நான் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். என்னுடைய தந்தையை ஜாக்கி உடனான அந்த சந்திப்பிற்கு தயார்படுத்தி, அவர் முதன்முறையாக உங்களை சந்திக்க வருகிறார். இந்த சந்திப்பை அசெளரியமாக மாற்றி விடாதீர்கள். ஜாக்கி ராணுவத்தைச் சேர்ந்தவர் அல்ல.ஆகையால் நீங்கள் பையனை பார்த்தால் மட்டும் போதும் என்று கூறியிருந்தேன். ( ரகுல் ப்ரீத் சிங் தந்தை ராணுவத்தைச் சேர்ந்தவர்)ஜாக்கியிடமும் நீ எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம். அப்பா எதையும் உன்னிடம் கேட்கமாட்டார் என்று சொல்லியிருந்தேன். 

(2 / 5)

ஆனால் அப்பாக்கள் அப்பாக்களாத்தானே நடந்து கொள்வார்கள். ஜாக்கியிடம் அவர் நேரடியாக சில விஷயங்களை கேட்டார். ஆனால் ஜாக்கி அதற்கு தயாராக இருந்தார். என்னுடைய அம்மாவின் பிறந்தநாளிற்கு அவர் டெல்லி வந்திருந்தார்.நாங்கள் மதிய உணவை ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது என்னுடைய அப்பா ஜாக்கியிடம்அடுத்ததாக உங்களது திட்டம் என்ன என்று கேட்டார்.   

(3 / 5)

அதற்கு ஜாக்கி… தன்னுடைய அடுத்தப்பட வெளியீடு குறித்தான வேலைகள் குறித்து பேசினார். அதற்கு என்னுடைய அப்பா, வேலை உள்ளிட்டவையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ரகுலை பொறுத்தவரை உன்னுடைய திட்டம் என்ன என்று கேட்டார்.  

(4 / 5)

இதைப்பார்த்த எனக்கு, சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவு  என்னுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது. ஆனால் அதற்கு ஜாக்கி கொடுத்த பதிலானது என்னுடைய அப்பாவை அவரின் ரசிகராக மாற்றிவிட்டது. ஆம் ஜாக்கி… ரகுல் எப்போது ரெடியாக இருக்கிறாளோ… அப்போது நானும் ரெடியாக இருப்பேன்’ என்றார்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்