Ind vs Eng 5th Test Result: அசத்திய அஸ்வின்.. 5வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. WTC அட்டவணையில் இந்தியா நம்பர் 1
India Test Series Win: தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2வது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே நாளில் ஐந்து விக்கெட்டுகளை கபளீகரம் செய்து அசத்தினார். ஜோ ரூட் மட்டுமே அரை சதம் விளாசினார்.

தர்மசாலாவில் உள்ள எச்.பி.சி.ஏ ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
மூன்றாவது நாள் காலையின் தொடக்கத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சோயிப் பஷீர் இந்தியாவின் கடைசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை தொடங்கியது. மற்றொரு தடுமாற்றமான தொடக்கத்தைப் பெற்றது என்றே கூறலாம், முதல் 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது, ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே நாளில் 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். பின்னர் குல்தீப் யாதவ் களமிறங்கினார், அஸ்வின் தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார், மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஜஸ்பிரித் பும்ரா லோயர் ஆர்டரை வீழ்த்தி இங்கிலாந்தை வெறும் 195 ரன்களுக்கு சுருட்டினார். ஜடேஜா 1 விக்கெட்டை சாய்த்தார்.
இவ்வாறு இந்தியா தர்மசாலா டெஸ்டில் ஜெயித்தது.
