‘அப்படியா.. அது எனக்கு தெரியாதே.. நான் எதையும் சுமக்க விரும்பல’ சூர்யகுமார் யாதவ் அளித்த ‘நச்’ பேட்டி!
டர்பனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இதுவரை மூன்று போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 'யங்கிஸ்தான்' அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க மைதானத்தில் இந்திய அணி தனது வெற்றியை தொடர்ந்தது. ஆம், தபரான் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இதை அறிந்த சூர்யகுமார் யாதவ் ஆச்சரியமடைந்தார். டர்பனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இதுவரை 3 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்திய கேப்டனுக்கு தெரியாத விசயம்
போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், "அப்படியா? எனக்கு அது பற்றி தெரியாது, இப்போதுதான் தெரிந்தது. " என்று ஆச்சரியமாக பதிலளித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 107 ரன்கள் அடித்து தொடர்ச்சியாக தனது இரண்டாவது சதத்தை அடித்தார். சாம்சனின் இன்னிங்ஸ் குறித்து, இந்திய கேப்டன் கூறுகையில், இப்போது அவர் தனது கடின உழைப்பின் பலனைப் பெறுகிறார் என்று கூறினார்.