‘Let's wait and see’-தலைநகரில் களம் காண காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ் டீம்.. மீண்டெழுமா பங்களாதேஷ்!
முதல் டி20 சர்வதேச போட்டியில் ஏமாற்றமளிக்கும் தோல்விக்குப் பிறகு பங்களாதேஷ் தங்கள் லெவன் அணியில் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும். இந்திய அணியில் உள்ளூர் வீரர் அறிமுகமாக வாய்ப்புள்ளது. அப்படி அவர் அறிமுகமானால், வாஷ்ங்டன் சுந்தர் பெஞ்ச்சில் அமர வைக்கப்படக் கூடும் என தெரிகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20 சர்வதேசப் போட்டியில், புதன்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொள்ளும். இந்தியா, குவாலியரில் நடந்த முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது. ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது. 2வது டி20 மேட்ச், நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் 6.30 மணிக்கு போடப்படும்.
அணியின் செயல்பாட்டைப் பொறுத்தவரை, இந்தியா எந்தவொரு மாற்றமும் இல்லாமல் பிளேயிங் 11-ஐ களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் நிர்வாகம் அணித் தேர்வில் தொடர்ச்சியை அப்படியே தொடர விரும்ப வாய்ப்புள்ளது. இருப்பினும், உள்ளூர் வீரரான ஹர்ஷித் ராணா இந்தியா vs வங்காளதேசம் T20 தொடரில் அறிமுகமான மூன்றாவது வீரரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பயிற்சி அமர்வின் போது, ஹர்ஷித் பந்து வீசினார், பின்னர் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பிரதான ஆடுகளத்தின் ஓரத்தில் பந்து வீச மோர்னே மோர்கல் உதவினார். அப்படியானால், வாஷிங்டன் சுந்தர் இந்தியாவின் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில், முதல் டி20 சர்வதேச போட்டியில் ஏமாற்றமளிக்கும் தோல்விக்குப் பிறகு பங்களாதேஷ் தங்கள் லெவன் அணியில் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும்.